நாம் ஒன்றாக இருந்தால் அனைத்து பிரச்சனைகளுக்கும் தீர்வு காணலாம் – ஆர்.எஸ்.எஸ் தலைவர்

நாம் ஒன்றாக இருந்தால் அனைத்து பிரச்சனைகளுக்கும் தீர்வு காணலாம் – ஆர்.எஸ்.எஸ் தலைவர்

Share it if you like it

குடியுரிமை திருத்த சட்டம் தொடர்பாக அசாமில் நடைபெற்ற ஒரு நிகழ்ச்சியில் ஆர்.எஸ்.எஸ். தலைவர் திரு மோகன் பாகவத் கலந்துக் கொண்டு பேசினார். அப்போது அவர், மதச்சார்பின்மை, ஜனநாயகம், பன்முகத்தன்மை நம் கலாச்சாரத்துடன் பின்னிப் பிணைந்தவை. இது தொடர்பாக பாரத நாட்டு மக்களுக்கு வேறு நாடுகள் எடுத்துரைக்க வேண்டிய அவசியம் இல்லை என குறிப்பிட்டார். சில காலமாக, அரசியலமைப்பு தங்களுக்கு உரிமை அளித்துள்ளது என்று கோரும் சிலர், அதே அரசியலமைப்பு வலியுறுத்தும் கடமைகளை மறந்து விடுகிறார்கள். நம் நாட்டு மக்கள், உலகனைத்தும் ஓர் குடும்பம் என்று தத்துவத்தை ஆயிரக்கணக்கான ஆண்டுகளாக கடைபிடித்து வருபவர்கள். வெவ்வேறு மொழிகள், உணவு பழக்கங்கள், சம்பிரதாயங்களை கொண்டிருந்தாலும், அனைத்து இந்தியர்களும் பண்பாட்டால் ஒன்றிணைந்தவர்கள் எனவும் தெரிவித்தார்.

ஒரு குறிப்பிட்ட பிரிவினர் ஒரே மதம், ஒரே மொழி, ஒரே சமூக நடைமுறை என கோரும் போது தான் பிரச்சனை ஏற்படுகிறது. இதே மக்கள், தங்கள் மக்கட் தொகையை அதிகரித்து, ஜனநாயக ரீதியாக தங்களை வலுவாக்கி கொண்டு, 5000 ஆண்டுகள் பழமையான இந்த மண்ணின் நாகரீகத்தை மறுக்கிறார்கள். வெளிநாடுகளில் உள்ள முஸ்லிம் குடும்பங்கள் ஒரு திட்டத்துடன் இங்கு நுழைவது அசாம் மக்கள் உட்பட பலருக்கும் கவலை ஏற்படுத்தும் விஷயமாகும்

ஒன்றிணைந்த வாழ்க்கை அவசியம் தான், ஆனால் இங்குள்ள மக்களுக்கு அது ஆபத்தை ஏற்படுத்த கூடாது. வெளிநாட்டில் இருந்து இங்கு வ்நதவர்கள் தங்கள் ஜனத்தொகையை பெருக்கி, வாக்கு வங்கியை அதிகரித்து, மற்ற துறைகளிலும் ஆதிக்கம் செலுத்த முயன்றால், இங்குள்ளவர்களுக்கு கடும் நெருக்கடி ஏற்படும் என்று பேசினார்.

மொழி, சாதிகள் வெவ்வேறாக இருந்தாலும் நாட்டை முன்னேற்ற பாதையில் அழைத்து செல்ல, நாம் ஒன்றாக இணைத்துள்ளோம். இது தான் நமது ஜென்மபூமி, கர்மபூமி. இது நம் வாழ்வின் அங்கம், நமது அடையாளம். நாம் ஒன்றாக இருந்தால் அனைத்து பிரச்சனைகளுக்கும் தீர்வு காணலாம்.

முன்னதாக. அசாமில் தேசிய குடியுரிமை பதிவேடு மற்றும் குடியுரிமை திருத்த சட்டம் தொடர்பாக புத்தகத்தை திரு மோகன் பாகவத் வெளியிட்டார்


Share it if you like it