பாகிஸ்தான், வங்கதேசம் போன்ற இஸ்லாமிய நாடுகளில் இருந்து மதரீதியாக கொடுமைப்படுத்தப்பட்டு இந்தியாவில் அடைக்கலம் புகுந்த ஹிந்து, கிறிஸ்தவ, ஜெய்ன உள்ளிட்ட மதத்தவர்களுக்கு குடியுரிமை கொடுக்க மத்திய அரசு முடிவெடுத்த பொழுது, அதை எதிர்த்து டில்லியில் பெரும் கலவரமே வெடித்தது. ஹிந்துக்களுக்கு இந்தியாவில் குடியுரிமை கொடுக்க கூடாது என நடைபெற்ற அக்கலவரத்திற்கு திரை மறைவில் உதவியதாக டெல்லியை ஆளும் ஆம் ஆத்மீ கட்சி மீது குற்றசாட்டு எழுந்தது.
இந்நிலையில் குற்ற சமூகம் என புறக்கணிக்கப்பட்டு இஸ்லாமிய நாடுகளே ஏற்றுக்கொள்ள மறுத்த ரோஹிங்கியா முஸ்லிம்களை, ஆம் ஆத்மீ கட்சி டெல்லியில் வைத்து சுகபோகமாக பராமரித்து வரும் விவகாரம் வெளிச்சத்திற்கு வந்துள்ளது. பிரபல செய்தி ஊடகம் ஒன்று ரோஹிங்கியா அகதிகள் முகாமில் செய்தி சேகரிப்பில் ஈடுபட்டிருந்த பொழுது ரோஹிங்கியா முஸ்லிம்கல் பலரும் டெல்லி அரசை புகழ்ந்து தள்ளினர். அவர்களுக்கு இலவச உணவு, உடை, இலவச குடியிருப்பு, , இலவச மின்சாரம், இலவச தண்ணீர் என வேலைக்கே செல்லாமல் வீட்டிலேயே சகல வசதிகளுடன் வாழ வழிவகை செய்யப்பட்டுள்ளது.
ஆனால் டெல்லி வாழ் மக்களுக்கோ தண்ணீர் பஞ்சம், உள்கட்டமைப்புக் குறைபாடு என பல இன்னல்கள் நிலவி வருவதால் இந்த விவகாரம் பெரும் சர்ச்சையை கிளப்பி உள்ளது.
https://www.facebook.com/watch/?v=3197645320521731