திருநங்கைகளுக்கு ’ஜாக்பாட்’ மத்திய அரசு அதிரடி ..! 

திருநங்கைகளுக்கு ’ஜாக்பாட்’ மத்திய அரசு அதிரடி ..! 

Share it if you like it

பாரதப் பிரதமர் மோடி தலைமையிலான அரசு திருநங்கைகளின் நலன் சார்ந்த விஷயத்தில் அதிக கவனம் செலுத்தி வருவது அனைவரும் அறிந்ததே. தற்பொழுது பல துறைகளில் சாதித்து வரும் அவர்களின் திறமை, ஆற்றல், உழைப்பை, மேலும் ஊக்கு விக்கும் விதமாக மத்திய ரிசர்வ் போலீஸ் படை, இந்திய திபெத்திய எல்லைப் பாதுகாப்பு படை, மத்திய தொழிலக பாதுகாப்பு படை, உள்ளிட்ட அனைத்து துணை ராணுவ படைகளிடமும் இது தொடர்பான கருத்துக்களையும், ஆலோசனைகளையும், பாரதப் பிரதமர் மோடி தலைமையிலான அரசு அண்மையில் கருத்து கேட்டு இருந்தது.

மேலும் பெருந்தொற்று பரவி வரும் இக்காலத்தில் பல தரப்பட்ட மக்களின் நலனில் அக்கறை செலுத்தி வந்தாலும். திருநங்கைகள் விஷயத்திலும் மத்திய அரசு கூடுதல் கவனம் செலுத்தி வருகிறது. இதனை தொடர்ந்து அவர்களுக்கு நிவாரண நிதியாக ரூ 1,500 வழங்க  பாரதப் பிரதமர் மோடி அரசு முடிவு செய்து உள்ளது.

இதனை தொடர்ந்து ஆதரவற்ற திருநங்கைகளுக்கு இருப்பிட வசதி அடங்கிய பல்வேறு நல்வாழ்வுத் திட்டங்களை அவர்களுக்கு அளிப்பதற்கான பணி மேற்கொள்ளப்பட்டு வருகிறது.

மேலும் திருநங்கைகளுக்கு பாதுகாப்பான உறைவிடங்களை அமைப்பதற்காக உருவாக்கப்படவுள்ள இந்த இல்லங்களில் உணவு, மருத்துவ வசதி, பொழுதுபோக்கு வசதிகள், போன்ற அடிப்படை அம்சங்களுடன் திறன் வளர்ச்சி சம்பந்தமான திட்டங்களுக்கும் ஏற்பாடு செய்யப்படும் என்று சமூக நீதி மற்றும் அதிகாரமளித்தல் இணையமைச்சர் நாராயண் ஸ்வாமி அவர்கள் மக்களவையில் எழுத்துபூர்வமாக வழங்கிய பதிலில் தெரிவித்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

நாட்டிலேயே முதல் முறையாக மூன்றாம் பாலினத்தவருக்கான பல்கலைக்கழகம்

நாட்டிலேயே முதல் முறையாக மூன்றாம் பாலினத்தவருக்கான பல்கலைக்கழகம் உத்தர பிரதேசத்தில் உள்ள குஷி நகரில். யோகி ஆதித்யநாத் அரசு அண்மையில் துவங்கியது என்பது குறிப்பிடத்தக்கது.


Share it if you like it