பாக்., பரிதாபங்கள் – பிரதமர் பங்களா இனி வாடகைக்கு விடப்படும்

பாக்., பரிதாபங்கள் – பிரதமர் பங்களா இனி வாடகைக்கு விடப்படும்

Share it if you like it

பயங்கரவாதம் என்றவுடன் நம் நினைவுக்கு வருவது பாகிஸ்தான் தான். அந்த அளவுக்கு பயங்கரவாதத்தை ஊக்குவித்து தேசவாளர்ச்சியில் கோட்டைவிட்ட நாடு அது. பயங்கரவாதத்தை ஒடுக்குவதற்காக அந்த நாட்டிற்கு அமெரிக்கா போன்ற நாடுகள் நிதி உதவி செய்து வந்தது. ஆனால் அந்த நிதியில் பயங்கரவாதிகள் மேலும் செழிப்பாக வளர்ந்து இந்திய உள்ளிட்ட நாடுகளில் வேர்பரப்ப துவங்கின. இதனால் வெகுண்ட இந்தியாவின் அதிரடி செயல்பாடுகளால், பாகிஸ்தானுக்கு செய்துவந்த நிதி உதவிகளை அமெரிக்கா போன்ற நாடுகள் நிறுத்தியது.

இதன் காரணமாக பாகிஸ்தானில் பயங்கரவாதிகளும் அவர்களை ஊக்குவித்த அரசும் கடுமனையான நிதி நெருக்கடியில் சிக்கித்தவித்தனர் இதனால் நாடாளுமன்ற கட்டிடத்துக்கு மின்சார கட்டணம் செலுத்தக்கூட வழியில்லாமல் போனது போன்ற பல நிகழ்வுகள் அரங்கேறியது அதில் ஒன்றாக தற்பொழுது பாகிஸ்தான், பிரதமர் அலுவலகம் மற்றும் கவர்னர் மாளிகை போன்றவற்றை திருமணம் போன்ற நிகழ்வுகளுக்கு வாடகைக்கு விட அரசு முடிவு செய்துள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

இந்தியா சுதந்திரமடைந்த பொழுது நம்மிடம் இருந்து பிரிந்து சென்ற நாடு பகிஸ்தான். எனவே பாகிஸ்தானும், இந்தியாவும் தனது 75வது சுதந்திர தினத்தை கொண்டாட தயாராகிவருகிறது. இந்நிலையில் ஒரு நாடோ, மதமோ, சமூகமோ வளர்ச்சியை விடுத்தது நாடுபிடிக்கும் கொள்கையோடு செயல்பட்டால் அதன் நிலை என்ன ஆகும் என்பதற்கு பாகிஸ்தான் ஒரு சிறந்த உதாரணம் என்கின்றனர் அரசியல் நோக்கர்கள்.


Share it if you like it