41 ஆண்டுகளுக்குப் பிறகு ஒலிம்பி போட்டியில் ஹாக்கி அணி வெண்கல பதக்கம் வென்று வரலாற்று சாதனையைப் படைத்த இந்திய ஆடவர் ஹாக்கி அணியின் கேப்டன் மன்ப்ரீத் சிங் அவர்களை பாரதப் பிரதமர் மோடி அவர்கள் கைப்பேசியின் வாயிலாக தொடர்பு கொண்டு தனது வாழ்த்துக்களை தெரிவித்து இந்திய அணிக்கு இன்ப அதிர்ச்சியை கொடுத்து இருந்தார்.
அதே வேளையில் பெண்கள் ஹாக்கி அணி தோல்வியை தழுவி வேதனையில் துவண்டு இருந்த பொழுது பாரதப் பிரதமர் மோடி தொலைபேசி வாயிலாக தொடர்பு கொண்டு ஊக்கம் அளிக்கும் வகையில் பேசிய காணொளி தற்பொழுது சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகிறது என்பது குறிப்பிடத்தக்கது.
பாரதப் பிரதமர் மோடி பேசியது.
- முதலில் உங்கள் அனைவருக்கும் எனது வாழ்த்துக்கள்.
- நீங்கள் சிந்திய வியர்வையால் இந்தியாவே பெருமை கொள்கிறது.
- (உரிமையோடு) பெயரை குறிப்பிட்டு அவரின் கையில் காயம் பட்டு உள்ளதே என்று நலம் விசாரிக்கிறார்.
- நீங்கள் அழ வேண்டாம் என்று பிரதமர் உருக்கம்..
நம்மூட்டு புள்ளைங்க போராடி தோத்தாலும் ஒரு தகப்பன் ஸ்தானத்துல இருத்து அவங்கள நாலு நல்ல வார்த்தை சொல்லி தேத்துறவரு தான்யா நாட்டுக்கே தலைவன்..🙏🙏🙏
இந்தியராய் பிறந்ததற்கு பெருமைபடுங்க மக்கா ❤❤❤❤ pic.twitter.com/6TbgQGokH7
— Saravanaprasad Balasubramanian 🇮🇳 (@BS_Prasad) August 6, 2021
பாரதப் பிரதமர் திரு.@narendramodi அவர்கள் ஒலிம்பிக்கில் விளையாடும் இந்திய வீரர்களோடு தொடர்பில் இருந்து அவர்களை ஊக்கப்படுத்தி வருகிறார் ..
வீரர்களோடு பிரதமர் அவர்கள் கைபேசி மூலம் உரையாடி அவர்களை ஊக்கப்படுத்தும் உரையாடல் பதிவு ..#PMModi #TokyoOlympics2020 pic.twitter.com/J36VwHCZ4J
— BJP Tamilnadu (@BJP4TamilNadu) August 5, 2021