மகர விளக்கு தெரியும் புனித தினத்தில் கேரள சுற்றுலா அமைச்சகம் தனது ட்விட்டர் பதிவில் மாட்டுக்கறியில் செய்யப்பட்ட உணவை பதிவிட்டிருக்கிறது.
சபரிமலை புனிதத்தை குலைப்பதற்கு கேரள கம்யூனிஸ்ட் அரசு செயல்பட்டுக்கொண்டு இருப்பது நாம் அறிந்ததே.
அதன் தொடர்ச்சியாக மகர விளக்கு காண்பதற்காக பல லட்சக்கணக்கான யாத்திரிகள் சபரிமலை காண்பதற்கு செல்லும் தினத்தில் கேரள சுற்றுலா அமைச்சகம் மேலும் ஒரு விஷமத்தை பரப்பியிருக்கிறது. தனது டிவிட்டர் பதிவில் சபரிமலை மகரவிளக்கு பற்றிய படங்களை வெளியிடாமல் மாட்டுக்கறியில் செய்யப்பட்ட உணவின் படத்தை பதிவிட்டு இருக்கிறது. இதை கண்டித்து உலகமெங்கும் வாழும் ஐயப்ப பக்தர்கள் அவர்களின் கண்டனத்தை ட்விட்டரில் பதிவிட்டு வருகின்றனர். இது கோடிக்கணக்கான ஐயப்ப பக்தர்களின் மத நம்பிக்கையை கொச்சைப்படுத்தும் செயல் என்பதில் யாருக்கும் மாற்றுக் கருத்து இல்லை. சிறுபான்மையினரின் வாக்கு வங்கிக்காக கேரள கம்யூனிஸ்ட் அரசு இம்மாதிரி செயல்களில் ஈடுபட்டு வருவதாக எதிர்க்கட்சியினரும் குற்றம்சாட்டியுள்ளனர்.
Tender chunks of beef, slow-roasted with aromatic spices, coconut pieces, and curry leaves. A recipe for the most classic dish, Beef Ularthiyathu, the stuff of legends, from the land of spices, Kerala: https://t.co/d7dbgWmlBw pic.twitter.com/aI1Y9vEXJm
— Kerala Tourism (@KeralaTourism) January 15, 2020
Follow us on Twitter : www.twitter.com/mediyaannews