ஆண்டவன் பிச்சை (1889-1990) சமகால இசையமைப்பாளர், முறையான கல்வி, அவர் பயிலவில்லை. ஆனால் தமிழ், தெலுங்கு மற்றும் சமஸ்கிருதத்தில் இசையமைத்தார். அவருடைய திறமைகள் திடீரென்று, இறைவனால் கொடுக்கப் பட்டது என்று கூறப் படுகிறது. அவருடைய பாடல் தொகுப்பு, பதங்களை கொண்டது. இசையமைப்பு மற்றும் எழுத்துக்கள் மதுரையைப் பற்றியது, யதுகுல கம்போஜியில் “ஹே காமாட்சி”, மற்றும் பிற கிருதிகள் ஆகியவை அடங்கும்.
விக்ரமாதித்யா, ஆதி சங்கரர், அருணகிரிநாதர் மற்றும் திருமூலர் ஆகிய நான்கு மகாத்மாக்களின் வாழ்க்கையில், மிகவும் குறிப்பிடத்தக்க ஒரு சம்பவம் நடந்தது. அவர்கள், தங்களின் ஆன்மாவை மற்றொரு உயிரினத்தின் உடலில் நுழைத்து சென்றனர். மகான்கள், தங்களின் புலன் நோக்கின் அனுபவத்தை காட்டுவதற்காக, இதைச் செய்கிறார்கள். ‘பின்னவாசல் பெரியவாவின்’ வாழ்க்கையில் ஒரு சம்பவம் நடந்தது. அவர் ஒரு பெண்ணின் பூத உடலுக்குள் நுழைந்தார். அவருக்கு சாபம் கொடுக்கப் பட்டதாகவும், அதனால் அவர் ஒரு பெண்ணாக பிறந்ததாகவும் நம்பப் படுகிறது. இருப்பினும், அதன் பின்னால் ஒரு கதை இருக்கிறது.
பின்னவாசல், திருச்சியிலிருந்து 28 மைல் தொலைவில், லால்குடி என்ற ஊரின் அருகாமையில் அமைந்து உள்ள, ஒரு நகரம். ராமகிருஷ்ணானந்தா என்று அழைக்கப்படும், ஒரு சித்த புருஷர் இருந்தார். அவரது சொந்த ஊர் கல்லிடைக்குறிச்சி. அவர் பல வருடங்கள், ஆவுடையார் கோவிலில் இருந்தார். இந்த கோவிலின் அழகு யாதெனில், கோவிலின் கருவூலத்தில் லிங்கமில்லை [மூர்த்தி], அதற்கு மாறாக அடித்தளத்தை மட்டுமே கொண்டுள்ளது, இது “ஆவுடை” என்று பொருளாகும். இது, பிரம்மனின் முழுமையான, உண்மையின் வடிவமற்ற, அம்சத்தைக் காட்டுகிறது. இராமகிருஷ்ணாந்தா, தனது ஆரம்ப ஆண்டுகளில், அவரது விருப்பத்திற்கு மாறாக, திருமணம் செய்து கொண்டார்.
அவர் ஆன்மீக உலகில், தன்னை இணைத்துக் கொள்ள விரும்பினார். எனவே, அவர் தனது மனைவியைப் புறக்கணித்து, கடவுளைத் தேட முயன்றார். பல ஆண்டுகளாக, அவர் சதாசிவ பிரம்மேந்திரரை குருவாக ஏற்று, கடும் தவம் புரிந்தார். ஆரம்ப காலங்களில், சுவாமி சிவானந்தா அவரது குருவாக இருந்தார். ஒருமுறை அவர் தனது குருவிடம், சன்யாச மார்கத்தில் வழி நடத்துமாறு கோரிய போது, சிவானந்தா அதை மறுத்தார். பின்னர் அவரது சமகாலத்தவர் அல்லாத சதாசிவ பிரம்மேந்திரா அவருக்கு, மானசிக குருவாக ஆனார். அவருக்கு நவசாக்ஷரி மந்திரத்தை வழங்கினார், இந்த மந்திரத்தின் மூலம், பல ஆன்மீக சக்திகளை அடைந்தார். ஒருமுறை, சதாசிவ பிரம்மேந்திரர், இவரது கனவில் தோன்றி, இவரின் மனைவியிட்ட சாபத்தால், ஒரு பெண்ணாக, இன்னொரு பிறப்பு எடுக்க வேண்டும் என்று கூறினார். பதிவிரதையான அவருடைய மனைவியின் சாபம், நிச்சயம் நடப்பது, ஒருபுறமிருக்க, மறுபுறம், ராம கிருஷ்ணானந்தாவிற்கு மறுபிறவி எடுப்பதில் சிறிதும் நாட்டமில்லை. எனவே சதாசிவ பிரம்மேந்திரா, ராமகிருஷ்ணானந்தாவின் சமாதியில் ஒரு துளை செய்யும்படி அறிவுறுத்தி, சரியான நேரத்தில் ஒரு பெண்ணின் உடலுக்குள் செல்ல, உதவுவதாக உறுதியளித்த பின்னர், அவரது கனவில் இருந்து மறைந்தார். ராமகிருஷ்ணானந்தா, தனது வாழ்க்கையை முன்னெடுத்துச் சென்றார். அவர், தனது பூத உடலை துறந்த வேளை, அவரது பக்தர்கள், அவரது சமாதியில் ஒரு துளை செய்தனர்.
சென்னையில், தெய்வ பக்தியுள்ள குடும்பத்தில் பிறந்தவர், மரகதவல்லி. இவர், தீவிர முருக பக்தர். பல கீர்த்தனைகளை இயற்றினார், இறைவன் கூட அவர் முன் தோன்றி, அவரிடமிருந்து கீர்த்தனங்களைக் கோருவார். ஒரு சராசரி இல்லத்தரசியாக வாழ்க்கை நடத்தினாலும், அவருடைய மனம் முழுவதும், முருகப் பெருமானையே நினைத்துக் கொண்டிருந்தது.
1949 இல், மரகதவல்லி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு, மாரடைப்பால் மரணம் அடைந்தார் என்று அறிவிக்கப்பட்டது. சதாசிவ பிரம்மேந்திரர், ராமகிருஷ்ணானந்தாவின் சமாதியில் தோன்றி, தூய்மையான அழகிய வாழ்க்கையை நடத்திய மரகதவல்லியின் பூத உடலில் நுழையும் படி கேட்டுக் கொண்டார், மேலும், முருகப் பெருமான் அந்த தெய்வீக உடலில், பல ஆண்டுகளாக வசித்து வந்தார். அவரது குருவின் வேண்டுகோளின் பேரில், ராமகிருஷ்ணானந்தா வைகாசி மாதத்தில், விசாக நட்சத்திரத்தில் மரகதவல்லியின் தெய்வீக உடலுக்குள் நுழைந்தார்.
மரகதவல்லி மீண்டும் உயிர் பெற்றதைக் கண்டு மருத்துவமனையில் இருந்த அனைவரும் அதிர்ச்சியடைந்தனர். அவர் கண் திறந்தது, மருத்துவர்களை முற்றிலும் குழப்பத்தில் ஆழ்த்தியது. ஆண்டுகள்கடந்தன, மரகதவல்லியின் உடலில் ராமகிருஷ்ணனா தொடர்ந்து பல கீர்த்தனைகளை இயற்றினார், அவர் “ஆண்டவன்பிச்சை” என்று அழைக்கப் பட்டார். மகாத்மாக்கள் மற்றொரு மனித பூத உடலுக்குள் நுழைவது, நான்கு முறை மட்டுமே நிகழ்ந்துள்ளது.
மகான்களால், தேவர்களை மனதால் உணர முடியும் என கூறப் படுகிறது, இது சேஷாத்ரி சுவாமிகளின் வாழ்க்கை வரலாற்றில் சித்தரிக்கப் பட்டுள்ளது. தேவர்கள் பிலஹரி ராகத்தில் பாடி, வானில் பறந்ததாக நம்பப்படுகிறது. தமிழ்நாட்டில் அருணாச்சல மலையை தேவர்கள் சுற்றி வருவதை, ரமண மகரிஷி அங்கீகரித்தார். பல மகான்கள், தேவர்கள், மலர் மாலைகளை வழங்குவதை உணர்ந்தனர், இது கீர்த்தனைகளில், அழகாக சித்தரிக்கப் பட்டுள்ளது. ஆண்டவன் பிச்சை வாழ்க்கையில், முருகப் பெருமான், அவர் கனவில் வந்து கீர்த்தனைகளைப் பாடுமாறு கேட்டுக் கொண்டார் – “வாடா பூமலையான பமாலையா என் மேல் பாடு”
ஆண்டவன் பிச்சை முருகன் மீது நிறைய கீர்த்தனைகளை இயற்றினார், ஒரு முறை இறைவன் மயிலின் இறகுகளைப் பறித்து, அறை முழுவதும் பரப்ப தொடங்கினார். தமிழில் “பிச்சை” என்ற சொல் “பறிக்கும் செயலைக் குறிக்கிறது”. முருகன் மறைந்த போது இறகுகளும், அனைத்து அறை முழுவதும் பரவியிருந்தன. பின்னர் அவருக்கு “பிச்சை” என்ற பட்டம் வழங்கப்பட்டது. இறைவன் மீது நம்பிக்கையை ஏற்படுத்த, இது போன்ற செயல்களை இறைவன் செய்கிறான்.
ஆண்டவன் பிச்சை பல கீர்த்தனைகளை இயற்றினார், இறைவனின் தெய்வீக மகிமைகளைப் பாடுவது, இறைவனால் மிகவும் வரவேற்கப்படுகிறது என்ற அற்புதமான உண்மையை நாம் அறிவோம். மகான்கள், நாம சங்கீர்த்தனத்தின் பாதையை பரப்புவதற்காக, அவதாரம் எடுத்தனர். அனைத்து மகான்களும், இறைவனின் தெய்வீக நாமங்களை, உச்சரிப்பதன் மகத்துவத்தை எடுத்துரைக்கும் கீர்த்தனைகளைப் பாடியுள்ளனர்.
ஒரு சாதாரண மனிதன், தனது புத்தியைப் பயன்படுத்தி, கீர்த்தனைகளை இயற்றுகிறான், அதே சமயம், மகான்கள் மௌனத்தில் கீர்த்தனைகளை உருவாக்குகிறார்கள் என்பது உண்மை. இது, ஒரு சமாதி மொழியாகும். அவர்கள், பகவானைப் பற்றி ஆழமாக சிந்திக்கும் போது, அவர்கள் இறைவனின் வார்த்தைகளையே கீர்தனைகளாக உருவாக்குகிறார்கள். நமது குரு மகராஜ், தனது பக்தர்கள் அனைவரும் மகாத்மாக்களால் இயற்றப்பட்ட கீர்த்தனங்களைப் பாடுமாறு போதிக்கிறார். பெரிய மகான்களால் இயற்றப்பட்ட கீர்த்தனங்களை மதித்து பாடும் பக்தருடன் பகவான் தொடர்புடையவர் ஆகிறார் என்பது உண்மை. ஆண்டவன் பிச்சை இசையமைத்த பாடல்களில், அவர் தனக்கென ஒரு முத்திரையை பதித்து கொள்ளவில்லை. அவருடைய கீர்த்தனைகள், இறைவனால் இயற்றப்பட்டது என்ற அழகிய கருத்தை இது வெளிப் படுத்துகிறது.
1962 ஆம் ஆண்டில், இந்தியா – சீனா போர் நடந்தது. முருகப் பெருமானின் சிறந்த பக்தரான ஆண்டவன் பிச்சை, அப்போது சென்னையில் வாழ்ந்து வந்தார். போரில் தேசத்தின் வெற்றிக்காக முருகப் பெருமானின் மீது ‘சண்முக ரக்ஷாபந்தனம்’ என்ற ‘ஸ்தோத்திரத்தை’ இயற்றினார். அதே போல, 1965-ல் இந்தியா -பாகிஸ்தான் போர் தொடங்கிய போது, இந்திய இராணுவத்தை வழி நடத்திய சிங்கப்பராஜா, காஞ்சி மகாசுவாமி ஸ்ரீசந்திரசேகரேந்திர சரஸ்வதி சுவாமியை, அவரது ஆசீர்வாதத்திற்காக அணுகினார். ஆண்டவன் பிச்சையை சந்திக்க, ஸ்ரீமகா சுவாமிஜி அறிவுறுத்தினார். எனவே, சிங்கப்பராஜா ஆண்டவன் பிச்சையை தரிசித்தார் மற்றும் போரில் இந்திய இராணுவத்தின் வெற்றிக்கு அவரிடம் பிரார்த்தனை செய்தார். இந்த நேரத்தில், ஆண்டவன் பிச்சைக்கு ஒரு திவ்ய திருஷ்டி ஏற்பட்டது. அதில், தேவர்களால் இழுக்கப்படும் தங்கத் தேரில், அம்பாள், எல்லையை காப்பது போல காட்சி கண்டார்! உடனடியாக ‘காளி கவசம்’ என்ற ‘ஸ்தோத்திரத்தை’ அவர் இயற்றினார். பல்லாயிரக்கணக்கில் அது அச்சிடப்பட்டு, அனைவருக்கும் விநியோகிக்கப் பட்டது.