Share it if you like it
”தமிழக கவர்னர் பன்வாரிலால் புரோகித் கலைவாணர் அரங்கத்தில் நடைப்பெற்ற 10-வது தேசிய வாக்காளர் தின நிகழ்ச்சியில் கலந்துக் கொண்ட அவர் உலகின் மிகப்பெரிய ஜனநாயக நாட்டில் வசிக்கும் நாம்.
வாக்குசீட்டு மூலம் மக்கள் பிரதிநிதிகளை தேர்ந்தெடுத்து ஜனநாயக கடமையை ஆற்றி வருகிறோம் என்பது மிக்க மகிழ்ச்சி அளிக்கிறது. நியாயமாகவும், அமைதியாகவும் தேர்தலை நடத்தும் இந்திய தேர்தல் ஆணயத்திற்கு எனது வாழ்த்தையும், பாராட்டுக்களையும் தெரிவித்துக்கொள்கிறேன்.
ஒவ்வொரு மாணவ, மாணவியும் வாக்குப்பதிவு நாளன்று விழிப்புடன் இருங்கள். வீட்டில் இருக்கும் பெற்றோரை ஓட்டு போட்டுவிட்டு வர வற்புறுத்துங்கள். ஓட்டுக்காக பணம் கொண்டு வரும் அரசியல்வாதி உள்ளிட்ட எவரையும் வீட்டுக்குள் அனுமதிக்காதீர்கள் இவ்வாறு அர் பேசியுள்ளார்.
Share it if you like it