Share it if you like it
தி.மு.க அரசை கண்டித்து தமிழகம் முழுவதும் அதிமுக ஆர்ப்பாட்டம்.
தி.மு.க ஆட்சி பொறுப்பேற்ற நாளில் இருந்தே தமிழகத்தில் சட்டம், ஒழுங்கு, என்பது பெரும் கேள்விக்குறியாக மாறி வருவதை அனைத்து ஊடகங்கள் வெளியிடும் செய்திகள் மூலம் அறிந்து கொள்ள முடியும்.
- திண்டுக்கல் மாவட்டம் கொடைக்கானலில் 5-ஆம் வகுப்பு படித்து வந்த சிறுமியின் எரிந்த நிலையில் மீட்கப்பட்ட உடல்,
- கோவை மாவட்டத்தில் காணாமல் போன பள்ளி சிறுமி ஒருவர் சடலமாக மீட்பு,
- பாலியல் தொல்லைக்கு உள்ளான பொண்தாரணி என்னும் மாணவி தற்கொலை செய்து கொண்ட சம்பவம்.
என பள்ளி சிறுமிகள், பெண்களுக்கு, எதிராக நிகழும் துயர நிகழ்வுகள் மற்றும் கழக கண்மணிகள் செய்து வரும் கூத்துக்களை எல்லாம் கண்டித்து. மிகப் பெரிய ஆர்ப்பாட்டத்தை அதிமுக நடத்தியது. அப்பொழுது முன்னாள் அமைச்சர் சி.வி.சண்முகம் அவர்கள் தமிழக பா.ஜ.க தலைவர் அண்ணாமலை குறித்து பேசிய காணொளி சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகிறது. பா.ஜ.க, மோடி, அண்ணாமலை, தமிழகத்தில் தவிர்க்க முடியாத சக்தியாக மாறியுள்ளதை முன்னாள் அமைச்சர் பேச்சின் மூலம் அறிந்து கொள்ள முடியும் என்று பலர் கருத்து கூறி வருகின்றனர்.
Share it if you like it