தமிழக அரசின் மஞ்சள் பை பிரச்சாரம்.
கோவை மாணவி தற்கொலை, சென்னை அடுத்து மாங்காட்டில் மாணவி தற்கொலை என்று, பள்ளி மாணவிகளுக்கு எதிரான பாலியல் குற்றச் சம்பவங்கள் தமிழகத்தில் அதிகரித்து வருகிறது. பள்ளி மாணவிகள், பெண்கள் பாதுகாப்பு, குறித்து மக்களிடம் விழிப்புணர்வை ஏற்படுத்தும் வகையில் ஒரு ஒரு வெளிநாட்டு அமைப்பையோ. சர்வதேச தொண்டு நிறுவனத்தின் உதவியையோ தி.மு.க அரசு நாடாமல். ஒரு உயிரற்ற மஞ்சள் பைக்குக்கு தமிழக முதல்வரும், ஊடகங்களும், அதிக முக்கியத்துவம் கொடுப்பது ஏன்? என்று பலர் கேள்வி எழுப்பி வருகின்றனர்.
தமிழ்நாட்டில் உள்ள ஒவ்வொரு குடும்பத்தின் மீதும் ரூ 2,00, 000-க்கும் மேல் கடன் உள்ளது என்று தமிழக நிதியமைச்சர் பி.டி.ஆர் பழனிவேல் தியாகராஜன் சமீபத்தில் வெள்ளையறிக்கை வெளியிட்டு இருந்தார். அதனை தொடர்ந்து நடந்தது என்ன? 2,500 கோடியில் சென்னையில் பூங்கா. 100 கோடி-யில் ஈ.வெ.ரா-விற்கு சிலை, 39 கோடியில் கலைஞருக்கு சமாதி, தற்பொழுது ஜெர்மன் நாட்டு அமைப்போடு “மஞ்சள் பை” பிரச்சாரம். இது போன்ற ஆலோசனைகளை வழங்க தான் தமிழக முதல்வருக்கு 5 பொருளாதார நிபுணர்கள் நியமனம் செய்யப்பட்டார்களா? என்று பலர் தங்கள் கோவத்தை சமூக வலைத்தளங்களில் வெளிப்படுத்தி வருகின்றனர்.