பிரபல எழுத்தாளர் மாரிதாஸ் மீது பதியப்பட்ட வழக்கு குறித்து மதுரை உயர்நீதிமன்ற கிளை அதிரடி கருத்து.
தி.மு.க ஆட்சியில் நிகழும், அட்டூழியங்கள், அடாவடிகள், இஸ்லாமிய அடிப்படைவாதிகள், கிறிஸ்தவ மிஷநரிகள், பிரிவினை சக்திகள், தமிழக அமைச்சர்கள் மீது ஆதாரத்துடன் குற்றச்சாட்டினை சுமத்தி தமிழக மக்களிடம் விழிப்புணர்வை ஏற்படுத்தும் விதமாக தொடர்ந்து காணொளிகளை வெளியிட கூடியவர் மாரிதாஸ்.
இவரின் காணொளிகள் ஆளும் கட்சிக்கு கடும் எரிச்சலையும், கோவத்தையும், ஏற்படுத்தியதன் காரணமாக. இவர் மீது தி.மு.க அரசு பொய் வழக்கினை பதிவு செய்து உள்ளது என்று அவரின் ஆதரவாளர்கள், பொதுமக்கள், என பலர் கருத்து தெரிவித்து இருந்தனர். அதனை தொடர்ந்து இஸ்லாமியர்களின் உணர்வுகளை மாரிதாஸ் புண்படுத்தி விட்டார் என்று இஸ்லாமிய அமைப்பை சேர்ந்தவர்கள் அவர் மீது வழக்கு தொடுத்து இருந்தனர். இந்த நிலையில் சென்னை உயர்நீதிமன்ற மதுரை கிளை இவ்வாறு அதிரடி கருத்தினை தெரிவித்து உள்ளது.
இஸ்லாமிய நம்பிக்கையை கேள்விக்குள்ளாகும் வகையிலோ அல்லது அதனை இழிவுபடுத்தும் விதமாகவோ எத்தகைய கருத்தையும் தெரிவிக்கவில்லை. ஒட்டுமொத்த இஸ்லாமியர்களை குறித்தும் இந்த கருத்தை குறிப்பிடவில்லை. ஆகவே அவர் மீது பதியப்பட்ட வழக்கு செல்லாது என்று நீதிபதி கருத்து தெரிவித்து உள்ளார்.