பிரதமர் பாதுகாப்பு குறித்து கவலைக் கொள்ளாமல் வன்மத்தை வெளிப்படுத்திய தமிழக எம்பிக்கள்.
காங்கிரஸ் ஆட்சி செய்யும் பஞ்சாப் மாநிலத்தில், ரூபாய் 42,750 கோடி மதிப்பிலான, புதிய திட்டங்களுக்கு அடிக்கல் நாட்ட பாரதப் பிரதமர் மோடி சில நாட்களுக்கு அங்கு சென்று இருந்தார். உலக தலைவர் பிரதமர் மோடியின், உயிருக்கு கடும் அச்சுறுத்தல் இருப்பதை, நன்கு அறிந்திருந்தும் கூட பஞ்சாப் காங்கிரஸ் அரசு, அலட்சியம் காட்டி இருப்பது. இந்தியா முழுவதும் கடும் அதிர்வலைகளை ஏற்படுத்தியுள்ளது.
காலிஸ்தான் பயங்கரவாதிகள், எதிரி நாட்டு எல்லை, பாகிஸ்தான் தீவிரவாதிகளின் நடமாட்டம், என்று மிகவும் ஆபத்தான பகுதியான அந்த இடத்தில் பிரதமர் வாகனம், 20 நிமிடங்கள் தடுத்து நிறுத்தப்பட்டு இருப்பது. திட்டமிட்ட சதி என்பது பாதுகாப்பு வல்லுநர்களின் உறுதியான கருத்து. இந்திரா காந்தி, ராஜீவ் காந்தி, என இரு தலைவர்களை காங்கிரஸ் கட்சி இழந்து உள்ளது.
இது நன்கு அறிந்து, இருந்தும் கூட பாரதப் பிரதமர் மோடியின் உயிரில், காங்கிரஸ் பஞ்சாப் அரசு அலட்சியம் காட்டி. இருப்பதன் பின்னணியில் சர்வதேச சதி இருக்குமோ? என்னும் அச்சம் மக்கள் மத்தியில் தற்பொழுது எழுந்து உள்ளது. காங்கிரஸ் வெற்றி பெற வேண்டுமானால், அது எந்த எல்லைக்கும் செல்லும் என்பதை, பிரதமர் பாதுகாப்பில் ஏற்பட்ட குளறுபடியே மிக சிறந்த சான்று.
கட்சி வேறுபாடு, கொள்கை வேறுபாடு, என்பதை எல்லாம் கடந்து நமது பிரதமர் மோடி என்கிற உணர்வோடு தங்களது எண்ணத்தை பகிர்ந்து வருகின்றனர். ஆனால் பிரதமர் மீது கொண்ட காழ்ப்புணர்ச்சியின் காரணமாக வி.சி.க தலைவர் திருமாளவன், காங்கிரஸ் எம்பி ஜோதிமணி, தி.மு.க எம்பி செந்தில் போன்றவர்கள் வழக்கம் போல பிரதமருக்கு எதிராக தங்களது அழுக்கு எண்ணத்தை வெளிப்படுத்தி இருப்பது தமிழக மக்கள் மத்தியில் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.