தி.மு.க ஆட்சியில் கருத்து சுதந்திரம் இல்லை என்பதை விளக்கம் விதமாக பிரபல கார்டூனிஸ்ட் ஜெகன் வரைந்த கார்ட்டூன் ஒன்று தற்பொழுது சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகிறது.
கருத்து சுதந்திரம், படைப்பு சுதந்திரம், எழுத்து சுதந்திரம், என்று எதிர்க்கட்சியாக தி.மு.க இருக்கும் பொழுது, தமிழக மக்கள் மத்தியில் வலியுறுத்தி பேசுவதும். ஆளும் கட்சியாக மாறி பின்பு கருத்து சுதந்திரத்தின் குரல் வலையை நெறிக்கும் விதமாக தி.மு.க அரசு செயல்படும் என்பது மக்களின் கருத்து.
தி.மு.க அரசின் தவறுகளை சுட்டிக்காட்டிய பிரபல அரசியல் விமர்சகர் மாரிதாஸ் மீது எவ்வாறான நடவடிக்கையை, ஆளும் கட்சி மேற்கொண்டது. என்பதை தமிழ் சமூகம் நன்கு அறியும். திருவள்ளூர் மாவட்டம் திருத்தணியில் பொங்கல் தொகுப்பில் வழங்கப்பட்ட புலியில் பல்லி இருந்ததை சுட்டிக்காட்டிய நபர் மீது வழக்கு பதிவு செய்து இருந்தது காவல்துறை.
தமிழகத்தில் கருத்து சுதந்திரம் என்பது பெரும் கேள்விக்குறியாக மாறி வரும் சூழலில் பிரபல கார்ட்டூனிஸ்ட் ஜெகன் வெளியிட்ட கார்ட்டூன் ஒன்று தற்பொழுது சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகிறது.