அனிதாவுக்கு ஒரு நியாயம்… லாவண்யாவுக்கு ஒரு நியாயமா? பதில் சொல்லுங்க சூர்யா, கார்த்தி!

அனிதாவுக்கு ஒரு நியாயம்… லாவண்யாவுக்கு ஒரு நியாயமா? பதில் சொல்லுங்க சூர்யா, கார்த்தி!

Share it if you like it

நீட் உட்பட அனைத்து விவகாரங்களிலும் மத்திய அரசுக்கு எதிராக கம்பு சுற்றும் நடிகர்கள், தற்போது கிறிஸ்தவ மதத்திற்கு மாற மறுத்ததால் டார்ச்சர் செய்யப்பட்டு தற்கொலை செய்து கொண்ட பள்ளி மாணவி பற்றி வாய் திறக்க மறுப்பது என்ன டிசைனோ என்ற கேள்வி எழுந்திருக்கிறது.

மருத்துவப் படிப்பு ஏழை மாணவர்களுக்கு வெறும் கனவாக மாறிவிடக் கூடாது என்பதற்காக, மத்திய அரசு நீட் தேர்வை நடைமுறைப்படுத்தியது. உலகின் தலைசிறந்த ஆசிரியர்கள், கல்வியாளர்கள் மற்றும் பல்வேறு தரப்பு நிபுணர்களிடம் இருந்து கிடைக்கப்பெற்ற ஆலோசனையின் பேரிலேயே இது கொண்டு வரப்பட்டது. உண்மையைச் சொல்லப் போனால் நீட் தேர்வு என்பது ஏழை மாணவர்களுக்கு வரப்பிரசாதம் என்பது அனைத்து கல்வியாளர்களின் ஒருமித்த கருத்தாக இருந்து வருகிறது. ஆனால், மருத்துவக் கல்லூரி நடத்திவரும் அரசியல்வாதிகளுக்கும், தொழிலதிபர்களுக்கும், மருத்துவத் துறையில் உள்ள மாஃபியாக்களுக்கும் நீட் தேர்வு பெரும் தடையாக இருக்கிறது என்பதை யாரும் மறுக்க முடியாது.

இது ஒருபுறம் இருக்க, சில அரசியல்வாதிகள், நடிகர்கள், பத்திரிகையாளர்கள் மற்றும் போலி போராளிகள் என பலரும் நீட் தேர்வுக்கு எதிராக மாணவர்களையும், பொதுமக்களையும் திசை திருப்பி வருகின்றனர். மேலும், பாமர மக்களின் உணர்வுகளை தூண்டும் விதமாக அறிக்கைகளையும், கண்டனங்களையும் தொடர்ந்து வெளியிட்டு வருகின்றனர். குறிப்பாக, நடிகர் சூர்யா தேவையில்லாமல் மூக்கை நுழைத்து வருவதை நாடே நன்கு அறியும். நீட் தேர்வு மட்டுமல்ல, மத்திய அரசு கொண்டுவரும் பல்வேறு திட்டங்கள் குறித்தும் தவறான பிரச்சாரம் செய்து வருகிறார் சூர்யா.

இவரது தம்பி கார்த்தியும் இப்படித்தான். இப்படி பல்வேறு விஷயங்களில் தேவையில்லாமல் மூக்கை நுழைத்து கம்பு சுற்றும் சூர்யா, தற்போது மதம் மாற மறுத்ததால் துன்புறுத்தப்பட்டு தற்கொலை செய்து கொண்ட மாணவி விவகாரம் தொடர்பாக இதுவரை வாய் திறக்கவில்லை. இதன் மூலம், மத்திய அரசுக்கு எதிராக மட்டுமே கம்பு சுற்றுவேன். மற்ற விஷயங்களில் நான் செவிடு பிளஸ் ஊமை என்று சொல்லாமல் சொல்கிறார்களோ சூர்யா சகோதரர்கள் என்று கிண்டலடிக்கிறார்கள் பொதுமக்கள்.

Image
Image


Share it if you like it