கிறிஸ்தவ மதத்திற்கு மாற மறுப்பு தெரிவித்து, சில தினங்களுக்கு முன்பு தற்கொலை செய்து கொண்ட மாணவி லாவண்யாவின் மரணத்தை அரசியலாக்க வேண்டாம் என கல்வியமைச்சர் அன்பில் பொய்யா மொழி மகேஷ் வேண்டுகோள் விடுத்துள்ளார்.
அரியலூர் மாவட்டம் வடுகபாளையாம் கிராமத்தைச் சேர்ந்தவர் விவசாயி முருகானந்தம். இவரது மகள் லாவண்யா, தஞ்சாவூர் மாவட்டம் திருக்காட்டுப்பள்ளி அருகேயுள்ள மைக்கேல்பட்டியில் அமைந்திருக்கும் தூய இருதய மேல்நிலைப்பள்ளி விடுதியில் தங்கி 12-ம் வகுப்பு படித்து வந்தார்.
பள்ளியில் சிறந்த மாணவியாக திகழ்ந்த, இவரை கிறிஸ்தவ மதத்திற்கு மாற பள்ளி ஆசிரியர்கள் வற்புறுத்தியுள்ளனர். இதற்கு மாணவி லாவண்யா மறுப்பு தெரிவித்ததாக கூறப்படுகிறது. அதனை தொடர்ந்து, மாணவியின் பெற்றோரை அழைத்து, உங்கள் மகளின் மேற்படிப்பு செலவு உட்பட அனைத்து செலவுகளையும் ஏற்றுக் கொள்கிறோம். கிறிஸ்தவ மதத்திற்கு மாற வேண்டும் என்று ஆசை வார்த்தைகளை அள்ளி வீசியுள்ளனர்.
மாணவியின் பெற்றோர் ஆசிரியர்களின் ஆசை வார்த்தைக்கு இணக்கம் தெரிவிக்க மறுத்த உள்ளனர். இதனால் கோவம் அடைந்த ஆசிரியர்கள், பொங்கல் விடுமுறைக்கு கூட மாணவியை வீட்டிற்கு அனுப்பாமல், விடுதியின் அறைகளை சுத்தம் செய்ய வைத்தல், பாத்திரம் கழுவ வைத்தல், என்று பலவகையிலும் லாவண்யாவிற்கு டார்ச்சர் கொடுக்கப்பட்டதாக கூறப்படுகிறது. இதனால் கடும் மன அழுத்தம் அடைந்த மாணவி விஷம் குடித்து தற்கொலை செய்து கொண்ட சம்பவம் இந்தியா முழுவதும் பெரும் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது. இந்த நிலையில் லாவண்யா மரணத்தை அரசியலாக்க வேண்டாம் என்று கல்வியமைச்சர் வேண்டுகோள் விடுத்து உள்ளார்.
நீட் தேர்வுக்கு எதிராக அனிதா எடுத்த முடிவுக்கு காரணம் மோடி அரசு, அ.தி.மு.க அரசு, என்று சேற்றை வாரி இறைத்து ஆவேசமாக பத்திரிக்கையாளர்களிடம் பேட்டி கொடுத்த ஸ்டாலின். தனது ஆட்சியில் மாணவி, ஒருவருக்கு இழைக்கப்பட்ட அநீதிக்கு, எதிராக பல கட்சிகள் குரல் கொடுத்து வரும் இந்த நிலையில். லாவண்யா மரணத்தை அரசியலாக்க வேண்டாம் என்று கல்வியமைச்சரை வைத்து பேச வைப்பது சரியா? என்று சமூக ஆர்வலர்கள் கேள்வி எழுப்பி வருகின்றனர்.