நாங்கள் ஆட்சிக்கு வந்தால் மதுக்கடைகளை உடனே, மூடுவோம் என்று தி.மு.க இளைஞர் அணிச் செயலாளர் உதயநிதி ஸ்டாலின் வாக்குறுதி கொடுத்து இருந்தார். இந்த நிலையில் தமிழகத்தில் டாஸ்மாக் வருவாய் 11% அதிகரித்து உள்ளதாக பிரபல ஊடகமான தந்தி டிவி செய்தி வெளியிட்டு இருப்பது மக்கள் மத்தியில் கடும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. வாக்குறுதியை நிறைவேற்ற தவறிய உதயநிதிக்கு கடும் கண்டனங்களும் குவிந்து வருகிறது.
நாங்கள் ஆட்சிக்கு வந்தால் மதுக்கடைகளை உடனே மூடுவோம் என்று தேர்தல் சமயத்தில் ஸ்டாலின், கனிமொழி, உதயநிதி ஸ்டாலின் உட்பட தி.மு.க-வின் பல முன்னணி தலைவர்கள் தமிழக மக்களுக்கு உறுதியான வாக்குறுதியை அள்ளி தெளித்து இருந்தனர்.
ஆட்சியை கைப்பற்றிய பின்பு தான் கொடுத்த வாக்குறுதியை காற்றில் பறக்க விட்டு விட்டது என்று பல்வேறு சமூக ஆர்வலர்கள் தி.மு.க அரசு மீது கடுமையான குற்றச்சாட்டுக்களை சுமத்தி வருகின்றனர். இந்த நிலையில் தான். பிரபல ஊடகமான தந்தி டிவி அதிர்ச்சிகரமான செய்தி ஒன்றினை வெளியிட்டு உள்ளது. அதில் கூறியிருப்பதாவது :
தமிழகத்தில் டாஸ்மாக் வருவாய் 11% அதிகரிப்பு தமிழகத்தில் 2020ஆம் ஆண்டு ஏப்ரல் – நவம்பர் வரை வருவாய் – ரூ.19,000 கோடி 2021ஆம் ஆண்டு ஏப்ரல் – நவம்பர் வரை வருவாய் – ரூ.21,000 கோடி – வருவாய் வந்து உள்ளதாக அந்த செய்தி குறிப்பு தெரிவிக்கிறது.
ஆட்சிக்கு வந்தால் மதுக்கடைகளை மூடுவோம் என்று தமிழக மக்களுக்கு வாக்குறுதி கொடுத்த உதயநிதி ஸ்டாலின் தற்பொழுது எங்கே? இருக்கிறார் என நெட்டிசன்கள் கேள்வி எழுப்பி வருகின்றனர்.