மதம் மாற மறுத்த மாணவி லாவண்யாவின் மரணத்திற்கு நீதி கேட்டு நாடு முழுவதும் ஆதரவு கோஷங்கள் எழுந்து வரும் சூழலில், பிரபல நடிகை சனம் ஷெட்டி மத மாஃபியாக்களால் அப்பாவி பெண்ணை இழந்து விட்டோம். இப்படி இருந்தால் எப்படி நாம் பெண் குழந்தைகள் தினத்தை கொண்டாட முடியும் என்று வேதனை தெரிவித்திருக்கிறார்.
இந்திய எல்லையான கல்வான் பள்ளத்தாக்குப் பகுதியில், சீன ராணுவம் அத்துமீறி நுழைந்து திடீர் தாக்குதல் நடத்தியதில் 21 இந்திய ராணுவ வீரர்கள் வீரமரணம் அடைந்தனர். இச்சம்பவத்திற்கு பின்பு, சீன பொருட்களை புறக்கணிக்க வேண்டும் என்ற கோஷம் பாரத தேசம் முழுவதும் ஒலிக்கத் துவங்கியது. பிரபல கிரிக்கெட் வீரர் ஹர்பஜன் சிங், பிரபல மாடல் மிலிந்த் சோமன் ஆகியோர் சீன பொருட்களை புறக்கணியுங்கள் என்று கருத்துத் தெரிவித்திருந்தனர்.
ஆனால், தமிழகத்தைச் சேர்ந்த நடிகர்கள் சீனாவிற்கு எதிராக குரல் கொடுக்காமல் மெளனம் காத்து வந்த நிலையில், பிரபல தமிழ் திரைப்பட நடிகை சனம் ஷெட்டி, டிக் டாக், பப்ஜீ செயலிகளையும், சீன பொருட்களையும் நாம் புறக்கணிக்க வேண்டும். இந்திய நிறுவனங்களுக்கு நாம் தொடர்ந்து ஆதரவு அளிக்க வேண்டும் என்றும் துணிச்சலாக தனது கருத்துத் தெரிவித்திருந்தார்.
அதேபோல, தற்போது நாடு முழுவதும் பெரும் கொந்தளிப்பை ஏற்படுத்தி இருக்கும், அரியலூர் மாணவி லாவண்யாவின் தற்கொலை விவகாரம் தொடர்பாக, தமிழகத்தைச் சேர்ந்த எந்த நடிகரும் வாய் திறக்காமல் கள்ள மெளனம் காத்து வரும் சூழலில், மத மாஃபியாக்களால் அப்பாவி பெண்ணை நாம் இழந்து விட்டோம். இப்படி இருந்தால் எப்படி நாம் பெண் குழந்தைகள் தினத்தை கொண்டாட முடியும் என்று வேதனை தெரிவித்திருக்கிறார் சனம் ஷெட்டி. இது குறித்து அவர் வெளியிட்டிருக்கும் ட்விட்டர் பதிவு இதோ…