நாடு முழுவதும் மாணவி லாவண்யாவின் தற்கொலைக்கு, நீதி கேட்டு போராடியதை கையில் எடுத்த சென்னை உயர்நீதிமன்ற மதுரை கிளை. பா.ஜ.க நடத்திய தொடர் போராட்டத்திற்கு கிடைத்த வெற்றி என சமூக ஆர்வலர்கள் கருத்து.
அரியலூர் மாவட்டத்தை சேர்ந்த மாணவி லாவண்யா, கிறிஸ்தவ மதத்திற்கு மாற மறுப்பு தெரிவித்து தற்கொலை செய்து கொண்ட சம்பவம் நாடு முழுவதும் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. மாணவிக்கு நீதி கேட்டு, பா.ஜ.க, இந்து முன்னணி, வி.ஹெச்.பி மற்றும் பல்வேறு ஹிந்து அமைப்புகள் தொடர்ந்து போராட்டம் நடத்தியது.
லாவண்யாவிற்கு நீதி கேட்டு ஜாதி, மதம், இனம், மொழி, கடந்து அனைத்து தரப்பு மக்களும் நாடு முழுவதிலும் இருந்து தொடர்ந்து குரல் கொடுத்து வந்தனர். இந்த நிலையில் தான், சென்னை உயர்நீதிமன்ற மதுரை கிளை மாணவி லாவண்யாவின் வழக்கை சி.பி.ஐக்கு மாற்றி இன்று அதிரடி உத்தரவினை பிறப்பித்து உள்ளது. மாணவி லாவண்யாவின் தற்கொலைக்கு நீதி கேட்டு போராடிய பா.ஜ.க-விற்கு கிடைத்த வெற்றி என சமூக ஆர்வலர்கள் பலர் கருத்து தெரிவித்து வருகின்றனர்.
மாணவி லாவண்யாவின் மரணத்திற்கு இரங்கல் கூட தெரிவிக்காமல் மெளனம் காத்து வந்த தமிழக முதல்வர் ஸ்டாலினுக்கு. உயர்நீதிமன்ற மதுரை கிளையின் உத்தரவு பேரிடியாக அமைந்து இருக்கும் என்பது மக்களின் கருத்து.