நகர்ப்புற உள்ளாட்சி தேர்தலில் இடப்பங்கீடு தொடர்பாக, எழுந்த சர்ச்சையில் காங்கிரஸ் எம்பி ஜோதிமணிக்கு கரூர் மாவட்ட காங்கிரஸ் கடும் கண்டனம் தெரிவித்து உள்ளது.
காங்கிரஸ் கட்சியின் மூத்த தலைவரும், கரூர் நாடாளுமன்ற உறுப்பினருமாக இருப்பவர் ஜோதிமணி. எதிர்வரும் நகர்ப்புற உள்ளாட்சி தேர்தல் இடப்பங்கீடு, தொடர்பாக பேச்சுவார்த்தை நடத்த தனது ஆதரவாளர்களுடன், கரூர் மாவட்ட தி.மு.க அலுவலகத்திற்கு சென்று இருந்தார். பேச்சுவார்த்தை நடைபெற்று வந்த நிலையில்., காங்கிரஸ் எம்பி ஜோதிமணி தி.மு.கவினரை திட்டி ஆவேசமாக அலுவலகத்தை விட்டு வெளியேறிய, காணொளி காட்சி ஊடகங்கள் மற்றும் சமூக வலைத்தளங்களில் வைரலாகி பெரும் பரபரப்பை ஏற்படுத்தி இருந்தது.
இந்த நிலையில்., காங்கிரஸ் எம்பி தன்னிச்சையாக செயல்பட்டு கட்சிக்கு தோல்வியைத் தேடித் தர முயற்சி செய்கிறார். அமைச்சர் செந்தில் பாலாஜி பற்றி காழ்ப்புணர்ச்சியில் ஜோதிமணி பேசுவதாக கரூர் மாவட்ட காங்கிரஸ் கண்டனம் தெரிவித்து இருப்பது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. காங்கிரஸ் மாவட்ட நிர்வாகிகள், அமைச்சர் செந்தில் பாலாஜிக்கு ஆதரவு தெரிவிக்கும் வகையில் பேசி இருப்பது. ஜோதிமணி ஆதரவாளர்கள் மத்தியில் கடும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.