வட்டி இல்லாம கடன் தருவாராம் இயேசு… கிறிஸ்தவ மிஷனரிகளின் பித்தலாட்டம்!

வட்டி இல்லாம கடன் தருவாராம் இயேசு… கிறிஸ்தவ மிஷனரிகளின் பித்தலாட்டம்!

Share it if you like it

மத மாற்ற முயற்சியின் எதிர்வினையாக ஏழை மாணவி லாவண்யா தற்கொலை செய்து கொண்ட பரபரப்பு அடங்குவதற்குள், இயேசுவை வணங்கினால் வட்டி இல்லாமல் கடன் தருவார் என்று அப்பாவி தூய்மைப் பணியாளர்களை கிறிஸ்தவ மிஷனரிகள் மூளைச்சலவை செய்யும் வீடியோ வெளியாகி பெரும் பரபரப்பை ஏற்படுத்தி இருக்கிறது.

தஞ்சாவூர் மாவட்டத்திலுள்ள கிறிஸ்தவ பள்ளி ஒன்றில் படித்த, அரியலூர் மாவட்டத்தைச் சேர்ந்த மாணவி லாவண்யா, மதம் மாற மறுப்புத் தெரிவித்து தற்கொலை செய்து கொண்டார். இச்சம்பவம் நாடு முழுவதும் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. இதற்கு கண்டனம் தெரிவித்து பா.ஜ.க., வி.ஹெச்.பி., ஹிந்து முன்னணி உள்ளிட்ட ஹிந்து அமைப்புகள் நாடு முழுவதும் போராட்டம், ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டன. மேலும், பா.ஜ.க. சார்பில் மாணவியின் குடும்பத்துக்கு 10 லட்சம் ரூபாய் நிதியுதவியும் வழங்கப்பட்டது.

இந்த மத மாற்ற துயர சம்பவத்தின் சுவடுகள் கூட மறையவில்லை. அதற்குள் மீண்டும் மத மாற்றும் முயற்சியை மேற்கொள்ளத் துவங்கி விட்டன கிறிஸ்தவ மிஷனரிகள். லாவண்யாவின் மரணம் நிகழ்ந்த அதே தஞ்சாவூரில், சமீபத்தில் புதிய பஸ் நிலையத்தில் பணியாற்றிக் கொண்டிருக்கிறார்கள் தூய்மைப் பணியாளர்கள். அப்போது அங்கு வந்த கிறிஸ்தவ மிஷனரியைச் சேர்ந்த ஒருவர், அப்பெண்களிடம் இயேசுவின் அருமை பெருமைகளைப் பற்றி அள்ளி விடுகிறார்.

அப்போது, ‘நாம் அனைவருமே இயேசுவின் குழந்தைகள்தான். நமக்கு அவரை பிடிக்காததால், நாம் அவரை வணங்குவதில்லை. இதனால்தான் நாம் கஷ்டப்படுகிறோம். நான் முன்பு சென்ட்ரிங் வேலை பார்த்துக் கொண்டிருந்தேன். இப்போது நல்ல நிலையில் இருக்கிறேன். வட்டி இல்லாமல் எனக்கு 3 லட்சம் ரூபாய் கடன் கொடுத்திருக்கிறார் இயேசு’ என்று சொல்கிறார். இப்படியாக நீள்கிறது அவரது பேச்சு. இந்த வீடியோதான் தற்போது சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகிறது.

இதைப் பார்த்து விட்டுத்தான், ஓஹோ, இயேசு வட்டி இல்லாமல் கடன்கூடக் கொடுப்பாரா என்று கிண்டல் செய்கிறார்கள் நெட்டிசன்கள். ஏற்கெனவே, இயேசு சுகமளிக்கிறார் என்கிற பெயரில், குழந்தை இல்லாத பெண்களை குழந்தை கொடுப்பது போலவும், கிட்னி செயலிழந்த பெண்ணுக்கு கிட்னியை சரிசெய்வது போலவும், ஊமை பேசுவது போலவும், கால் ஊனமடைந்தவர் நடப்பது போலவும் பல சித்து வேலைகளை செய்து, மக்களை ஏமாற்றி வருகிறார்கள் கிறிஸ்தவ மிஷனரிகள். தற்போது வட்டி இல்லாமல் கடன் கொடுப்பது போல ஏழை எளிய மக்களிடம் ஆசையை தூண்டிவிட்டு, மதம் மாற்ற நினைக்கிறார்கள் என்று குமுறுகிறார்கள் ஹிந்து அமைப்பினர்.


Share it if you like it