நகர்ப்புற உள்ளாட்சி தேர்தல் சூடுபிடித்து இருக்கும் நிலையில் காங்கிரஸ் பிரமுகர் பொதுமக்களிடம் பட்டா கத்தியைக் காட்டி ஓட்டு சேகரிக்க முயன்ற சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
பா.ஜ.க, அ.தி.மு.க தனித் தனியாகவும், தி.மு.க கூட்டணி ஓர் அணியாகவும் இந்த நகர்ப்புற உள்ளாட்சி தேர்தலில் மக்களை சந்திக்க உள்ளனர். தமிழக பா.ஜ.க தலைவர் அண்ணாமலை தனது கட்சி வேட்பாளர்களை ஆதரித்து தீவிர சுற்றுப்பயணம் மேற்கொண்டு உள்ளார்.
வி.சி.க கட்சியின் கொடியையோ, எனது பெயரையோ தோழமை கட்சிகள் தங்களது பேனர்களில் புறக்கணித்தால். யாரும் கவலைப்பட வேண்டாம் என விடுதலை சிறுத்தைகள் கட்சியின் தலைவர் திருமாவளவன் தனது தொண்டர்களுக்கு அறிவுரை வழங்கியது கூட்டணி கட்சிகளின் மத்தியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி இருந்தது. சீட்டு கிடைக்காத விரக்தியில் காங்கிரஸ் கட்சியை சேர்ந்தவர்கள் தி.மு.கவிற்கு எதிராகவும், திமுக-வை சேர்ந்தவர்கள் காங்கிரஸ்க்கு எதிராக என இருதுருவங்களாக களத்தில் மோதி வருகின்றனர்.
இந்த நிலையில். காங்கிரஸ் கட்சியை சேர்ந்த நிர்வாகி பூபாலன் என்பவர் சுயேட்சையாக போட்டியிடும் தனது மனைவிக்கு ஆதரவாக பட்டாக் கத்தியைக் காட்டி மக்களிடம் ஓட்டு கேட்ட சம்பவம் காஞ்சிபுரத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. தவறான முடிவினை எடுத்து இன்று வரை தி.மு.க ஆட்சியில் கடும் இன்னல்களை அனுபவித்து வரும் மக்கள் நகர்ப்புற தேர்தலில் விழித்துக் கொள்ள வேண்டும் என்பதே அனைவரின் எண்ணம்.