ஆஸ்கார் விருது பட்டியலில் இடம் பெற்றிருப்பதாக பில்டப் கொடுத்த சூர்யாவின் ‘ஜெய் பீம்’ திரைப்படக் குழுவினரை, காறித் துப்பாத குறையாக விரட்டி அடித்திருக்கிறது ஆஸ்கார் அகாடமி என்பதுதான் ஹைலைட்!
தமிழ் திரைப்பட நடிகர் சூர்யாவின் நடிப்பு மற்றும் தயாரிப்பில் கடந்தாண்டு வெளியானது ‘ஜெய் பீம்’ என்கிற திரைப்படம். ஆதிக்க மற்றும் தாழ்த்தப்பட்டதாகக் கருதப்படும் இரு ஜாதிகளையும் மையப்படுத்தி எடுக்கப்பட்ட படம். இது, மேற்கண்ட இரு ஜாதிகளுக்கும் மோதலை ஏற்படுத்தும் வகையில் இருப்பதாக குற்றச்சாட்டு எழுந்தது. இத்திரைப்படத்தை ஓ.டி.டி.யில் வெளியிட்டார் சூர்யா. இப்படத்தைப் பார்த்த பலரும் கடும் அதிர்ச்சியடைந்தனர். ஏனெனில், ஆதிக்க ஜாதியைச் சேர்ந்தவர்கள், தாழ்த்தப்பட்ட ஜாதியைச் சேர்ந்தவர்களை பலிகடாவாக்குவதுபோல கதை அமைந்திருந்தது. குறிப்பாக, தமிழகத்தின் வட மாநிலங்களில் மெஜாரிட்டியாக இருக்கும் வன்னியர் சமுதாயத்தைச் சேர்ந்தவர்களை மறைமுகமாக தாக்குவதுபோல கதைக்களம் இருந்தது. இதனால், ‘ஜெய் பீம்’ திரைப்படத்தை மட்டுமல்ல, அப்படத்தை தயாரித்து நடித்த நடிகர் சூர்யாவின் ஒட்டுமொத்த படங்களையும் புறக்கணிக்கப்போவதாக அச்சமுதாயத்தினர் கூறிவந்தனர்.
அதேசமயம், நடிகர் சூர்யாவைப் போன்ற போலி போராளிகள் தரப்பு ‘ஜெய் பீம்’ திரைப்படத்தை ஆகா ஓகோ என்று புகழ்ந்தது. இதனால், உச்சி குளிர்ந்துபோன சூர்யா மற்றும் ‘ஜெய் பீம்’ படக்குழுவினர், அத்திரைப்படத்தை ஆஸ்கார் விருதுக்கு அனுப்பி வைத்ததாக தகவல் வெளியானது. மேலும், சமூக வலைத்தளங்களில் எல்லாம் ‘ஜெய் பீம்’ திரைப்படம் ஆஸ்கார் விருதுக்கு தேர்வு செய்யப்பட்டிருப்பதாகவும், விருது பட்டியலில் இடம்பெற்றிருப்பதாகவும் கூறியதோடு, ஒரு பட்டியலையும் வெளியிட்டனர். இதனால், இந்த படத்துக்கு ஆஸ்கார் விருதா என்று வேதனை அடைந்தார்கள் வன்னியர் சமுதாயத்தினரும், இதர பிற்படுத்தப்பட்ட சமுதாயத்தினரும்.
இந்த நிலையில்தான், ‘ஜெய் பீம்’ திரைப்படம் ஆஸ்கார் விருதுக்கு தேர்வாகவே இல்லை என்கிற தகவல் அம்பலமாகி இருக்கிறது. இதனால், ஏகப்பட்ட பில்டப் கொடுத்த நடிகர் சூர்யா, மூக்குடைபட்டு அசிங்கப்பட்டு நிற்கிறார். அதாவது, ஆஸ்கார் விருத்துக்கு பரிந்துரை செய்யப்படும் திரைப்படங்களின் பட்டியலில்தான் ‘ஜெய் பீம்’ படமும் பெற்றிருக்கிறது. புரியும்படி சொல்ல வேண்டுமானால், ஆஸ்கார் அகாடமியின் விதிகளின்படி, அவ்விருதுக்கு தகுயுள்ளதாகக் கருதப்படும் திரைப்படங்களை, அப்படக்குழுவினர் பரிந்துரை செய்யலாம். இது ஆஸ்கார் அகாடமியின் நினைவூட்டல் பட்டியலில் இடம்பெற்றிருக்கும்.
இந்தப் பட்டியலில் இருந்துதான் விருதுக்குரிய திரைப்படங்களை தேர்வு செய்யும் ஆஸ்கார் அகாடமி. இந்த நினைவூட்டல் பட்டியலில் மொத்தம் 276 திரைப்படங்கள் இருக்கும். இதில்தான் ‘ஜெய் பீம்’ திரைப்படமும் இருந்திருக்கிறது. ஜெய் பீம் மட்டுமல்ல, மரைக்காயர் திரைப்படமும் இப்பட்டியலில் இடம் பெற்றிருந்தது. ஆனால், அத்திரைப்படக் குழுவினர் எவ்வித ஆர்ப்பாட்டமும் இன்றி அமைதியாவே இருந்தனர். காரணம், அப்படக்குழுவினருக்கு தெரியும், அது விருதுக்கான பட்டியல் அல்ல என்பது. அதேசமயம், நடிகர் சூர்யாவும், ஜெய் பீம் படக்குழுவினரும் ஏதோ ஆஸ்கார் விருதுக்குரிய பட்டியலில் இருப்பதாகக் கருதி ஏகப்பட்ட பில்டப் கொடுத்து வந்தனர். ஆனால், தற்போது அவர்களது குட்டு வெளிப்பட்டு விட்டது. இதனால், மக்கள் மத்தியிலும், திரையுலகினர் மத்தியிலும் அசிங்கமும், அவமானமும் பட்டு நிற்கிறார் சூர்யா. இதுக்குத்தான் ஓவரா சீன் போடக்கூடாதுங்குறது!