அன்று… இன்று… கனிமொழியின் புது உருட்டு!

அன்று… இன்று… கனிமொழியின் புது உருட்டு!

Share it if you like it

கொடுத்த வாக்குறுதிகளை நிறைவேற்றாமல், மத்திய அரசின் மீது பழியை போட்டு தி.மு.க. எம்.பி. கனிமொழி பேசி இருப்பதற்கு பலரும் கடும் கண்டனம் தெரிவித்து வருகின்றனர்.

ஆட்சிக்கு வந்த உடன் முதல் கையெழுத்தே நீட் தேர்வினை ரத்து செய்வோம். பெட்ரோல், டீசல் விலையை ஜி.எஸ்.டி.க்குள் கொண்டு வருவோம். மகளிருக்கு ஆயிரம் ரூபாய் வழங்குவோம் என்று ஏராளமான வாக்குறுதிகளை அளித்து விட்டு திணறி வருகின்றனர். இந்த நிலையில்தான், நகர்ப்புற உள்ளாட்சித் தேர்தலை தி.மு.க. அரசு சந்திக்கும் சூழல் ஏற்பட்டுள்ளது. மக்களுக்கு கொடுத்த வாக்குறுதிகளை நிறைவேற்ற முடியாமல், படுதோல்வியடைந்திருக்கும் விடியல் அரசு, தற்போது உள்ளாட்சித் தேர்தலில் வெற்றி பெற வேண்டும் என்ற ஒற்றை நோக்கில், மத்திய அரசு மீதும், பா.ஜ.க. மீதும் வீண் பழியை சுமத்திவருகிறது. இதன் மூலம் மக்களின் முழு கவனத்தையும் டெல்லி பக்கம் திருப்பி விடும் முயற்சியில் இறங்கியுள்ளதை தமிழக மக்கள் தற்பொழுது உணர்ந்துள்ளனர்.

அந்த வகையில், சமையல் எரிவாயு சிலிண்டருக்கு 100 ரூபாய் மானியம் வழங்குவோம் என்று கடந்த தேர்தல் அறிக்கையில் கூறியிருந்தார் ஸ்டாலின். அப்படி இருக்க, தற்போதோ சிலிண்டர் விலையை குறைப்பது மத்திய அரசின் கையில் உள்ளது என்று தூத்துக்குடி எம்.பி. கனிமொழி பேசியிருப்பது மக்கள் மத்தியில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. 1000 ரூபாய் எப்போ தருவீர்கள் என உதயநிதியிடம் பெண்மணி ஒருவர் கேட்டதற்கு, இன்னும் 4 ஆண்டுகள் உள்ளது என்று பதிலளித்திருந்தார். வெகுவிரைவில் 1000 ரூபாய் மகளிருக்கு வழங்கப்படும் என்று முதல்வர் காணொளி வாயிலான பரப்புரையில் பேசி இருந்தார். இப்படி, முரண்பட்ட வகையில் முதல்வரும், அவரின் மகனும் பேசி வருவது கடும் கோவத்தை ஏற்படுத்தியுள்ளது என்றால். கனிமொழியின் பேச்சு அதைவிட தமிழக மக்களிடம் கடும் கோவத்தை ஏற்படுத்தியுள்ளது.


Share it if you like it