திராவிடர் விடுதலைக் கழகத்தின் தலைவர் கொளத்தூர் மணியின் கூட்டாளி பெரியார் சரவணனிடம் என் நிர்வாண படங்கள் உள்ளது. அது என் அனுமதி இல்லாமல் எடுக்கப்பட்டது. நிர்வாணப் படங்களை காட்டி பணம் முற்சி நடைபெறுகிறது என்று பிரான்ஸ் நாட்டு பெண்மணி கொளத்தூர் மணி’யிடம் நீதி கேட்டு தனது குற்றச்சாட்டை முன்வைத்த காணொளி தற்பொழுது சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகிறது.
வீரமணியிடம் கருத்து வேறுபாடு ஏற்பட்டு, திராவிடர் விடுதலைக் கழகம் என்ற பெயரில் புதிய இயக்கத்தை உருவாக்கி, அதன் தலைவராக தன்னை நியமனம் செய்து கொண்டவர் கொளத்தூர் மணி. கள்ளக்காதலுக்கு, திருமணம் கடந்த உறவு என்று புது விளக்கம் கொடுத்தவரும், தமிழ்நாடு பாடத்திட்ட நிறுவன அறிவுரைக் குழு உறுப்பினருமான சுப.வீரபாண்டியனின் மிக நெருங்கிய நண்பருமான கொளத்தூர் மணி மீது தான் பிரான்ஸ் நாட்டு பெண்மணி பகீர் குற்றச்சாட்டை சுமத்தியுள்ளார்.
பெரியார் சரவணன் என்பவரிடம் எனது நிர்வாண புகைப்படம் உள்ளது. இது என் அனுமதி இல்லாமல் எடுக்கப்பட்டது. அவர் மீது நடவடிக்கை எடுக்காகுமாறு கொளத்தூர் மணியிடம் புகார் தெரிவித்தேன் அந்த பொறுக்கி மீது இதுவரை எந்தவித நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை. பல பெண்களுக்கு பாலியல் தொல்லை கொடுத்துவர் சரவணன் என உருக்கமாக பேசியுள்ளார்.
இக்காணொளி தற்பொழுது சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகிறது. இதுதான் தற்பொழுது பேசு பொருளாக மாறியுள்ளது. போலி பெரியாரிஸ்ட்கள். பெண்களின் நிர்வாணப் படத்தைக் காட்டி பணம் பறிக்கிறார்கள் என்று நெட்டிசன்கள் சமூக வலைத்தளங்களில் வெளுத்து வாங்கி வருகிறார்கள். திராவிட இயக்கத்தினர் சமீபகாலமாக இதுபோன்ற பல்வேறு பாலியல் புகார்களில் சிக்கி வருகின்றனர் என்பது குறிப்பிடத்தக்கது