தில்லையாடி வள்ளியம்மை!
பிறந்த நாள் – 22 பிப்ரவரி 1898 / நினைவு – 1914
ஆங்கிலக் கல்வியுடன், இசையையும் வள்ளியம்மை கற்று உள்ளார். அவரின் தந்தை முனுசாமி அவர்கள், காந்தியடிகள் தலைமையில் நடந்த சத்தியாகிரகப் போராட்டத்தில் பங்கேற்று, சிறை சென்று உள்ளார்.
கிறிஸ்தவ முறைப்படி செய்யப் படும் திருமணம் மட்டுமே செல்லுபடியாகும் எனவும், மற்ற சம்பிரதாய முறைப்படி நடைபெறும் திருமணங்கள் செல்லுபடி ஆகாது எனவும், தென்னாப்பிரிக்காவில் உள்ள உச்ச நீதிமன்றம், 1913 ஆம் ஆண்டு, மார்ச் மாதம் 14 ஆம் தேதி, ஒரு தீர்ப்பை வழங்கியது. இதனை எதிர்த்து, தென்னாப்பிரிக்காவில் வசித்து வந்த இந்தியர்கள், பெரும் போராட்டத்தில் ஈடுபட்டனர். இந்தியாவில் நடைபெற்ற சத்தியாகிரகப் போராட்டத்திற்கு, இந்த பிரச்சினைகளே வழிகாட்டியது.
கிறிஸ்துவ மதச் சடங்கு படி, செய்யப்படும் திருமணமே, செல்லுபடியாகும் என தென்னாப்பிரிக்காவில் சட்டம் இயற்றியதை எதிர்த்து, தன்னுடைய தாயுடன், போராட்டத்தில் பங்கேற்றார்.
தனது தந்தையின் உடல்நிலை மிகவும் பாதிக்கப்பட்டு மருத்துவமனையில் இருந்த நிலையிலும், வள்ளியம்மையும் அவரது தாயாரும் போராட்டத்தில் ஈடுபட்டார்கள். 1913ஆம் ஆண்டு, அக்டோபர் மாதம் 29 ஆம் தேதி, பெண்கள் நடைபயணமாக சென்று பிரச்சாரம் செய்தனர். வள்ளியம்மை, செல்லும் வழியில், அங்கு உள்ள தொழிலாளர்களிடையே, பிரச்சாரம் செய்தார்.
அது நீண்ட தூர நடைப் பயணம். வள்ளியம்மை கைது செய்யப்பட்டு, சிறை தண்டனை விதிக்கப் பட்டார். தங்கள் உடலை மிகவும் பாதிக்கப்பட்ட போதும், கலக்கம் அடையாமல், தான் கொண்ட கொள்கையில் விடாப்பிடியாக இருந்தார்.
சொந்தமாக கொடி கூட இல்லாத இந்தியர்கள் என ஏளனம் செய்த ஆங்கிலேயப் போலீசாரிடம், தன்னுடைய புடவையின் முந்தானையை காண்பித்து, இது தான் எங்கள் நாட்டின் தேசியக் கொடி என சூளுரைத்தார்.
தன்னுடைய பதினாறு வயதில், 22 பிப்ரவரி 1914 ஆம் ஆண்டு, மரணம் அடைந்தார் அப்போது, காந்திஜி அவரைப் போன்ற தியாகிகள் தான், இந்திய சுதந்திர போராட்டம் ஊக்கம் பெறுகிறது என கூறினார்.
தில்லையாடி வள்ளியம்மை நினைவாக, இந்திய அரசு, நாகப்பட்டினத்தில் உள்ள தில்லையாடியில் 1971 ஆம் ஆண்டு நினைவகம் கட்டியது.
31 டிசம்பர் 2008ல் மத்திய அரசு, அவர் நினைவாக, அஞ்சல் தலை வெளியிட்டு கௌரவப் படுத்தியது.
- பாபு