நடந்து முடிந்த உள்ளாட்சி தேர்தலின் முடிவுகள் தற்பொழுது அறிவிக்கப்பட்டு வருகிறது. அ.தி.மு.க, தி.மு.க-வை அடுத்து பா.ஜ.க மூன்றாவது பெரிய கட்சியாக மாறியுள்ளதாக அரசியல் நோக்கர்கள் கருத்து தெரிவித்து வருகின்றனர்.
பணபலம், அதிகார பலம், மது, பிரியாணி, கொலூசு, ஹாட் பாக்ஸ் என ஏராளமான பரிசு பொருட்களை வழங்கி தி.மு.க வெற்றியை விலைக்கு வாங்கி ஜனநாயக படுகொலையை நிகழ்த்தி இருக்கிறது என்பதில் யாருக்கும் மாற்று கருத்து இருக்க முடியாது. அந்த அளவிற்கு தி.மு.க பணத்தை தண்ணீர் போல வாரி இறைத்துள்ளது என அரசியல் நோக்கர்கள் கருத்து தெரிவித்து வருகின்றனர். இந்த நிலையில் தான், தற்பொழுது உள்ளாட்சி தேர்தல் முடிவுகள் அறிவிக்கப்பட்டு வருகிறது.
கன்னியாகுமரி மாவட்டம் இரணியல் பேரூராட்சியில் 4,5,6,7,8,9,10,12 வார்டுகளில் பாஜக அமோக வெற்றி அப்பேரூராட்சியைக் கைப்பற்றியுள்ளது. கிருஷ்ணகிரி நகராட்சியில் 10-வது வார்டில் பா.ஜ.க வேட்பாளர் முதன் முறையாக வெற்றி பெற்று அனைவரின் கவனத்தையும் ஈர்த்துள்ளார். வடுகபட்டி பேரூராட்சி 5-வது வார்டில் பா.ஜ.க வேட்பாளர் வசந்த் பாலாஜி வெற்றி. கோவை தெற்கு மாவட்டம் செட்டிபாளையம் பேரூராட்சி 2மற்றும் 3ம் வார்டுகளில் பாஜக வெற்றி. திருமலையம்பாளையம் பேரூராட்சியில் 3வது வார்டில் பா.ஜ.க வேட்பாளர் தமிழரசி வெற்றி. திருவட்டார் 1வது வார்டு மற்றும் இராமநாதபுரம் மாவட்டம் ஆர்.எஸ்.மங்களம் பேரூராட்சி 3வது வார்டில் பாஜக வெற்றி.
நீலகிரி மாவட்டம் கீழ்குந்தா பேரூராட்சி வார்டு 6-ல் பாஜக வேட்பாளர் வெற்றி பெற்றுள்ளார். பல்லடம் நகராட்சியில் பாஜக இரண்டு வார்டுகளில் வெற்றி பெற்றுள்ளது. விருதுநகர் கிழக்கு மாவட்டம் அருப்புக்கோட்டை நகராட்சி வார்டு 26 பாஜக வேட்பாளர் முருகானந்தம் வெற்றி பெற்றுள்ளார். அதேபோல, ஈரோடு மாவட்டம் கிளாம்பாடி பேரூராட்சி 13வது வார்டில் பாஜக வேட்பாளர் ஜெகதாம்பாள் வெற்றி.
தமிழகத்தில் பா.ஜ.க கால்ஊன்றவே முடியாது நாங்கள் விடமாட்டோம், என்று தி.மு.க, மற்றும் அதன் கூட்டணி கட்சியை சேர்ந்தவர்கள் குரல் கொடுத்து வந்தாலும். அதனை எல்லாம் முறியடித்து மக்களிடையே பா.ஜ.க பெறும் வரவேற்பை பெற்றுள்ளது. பல இடங்களில் தி.மு.க மற்றும் அ.தி.மு.க-விற்கு மாற்றாக பா.ஜ.க கடும் போட்டியை உருவாக்கியுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது. பா.ஜ.க-வின் வெற்றியை அக்கட்சியை சேர்ந்த தொண்டர்கள் தற்பொழுது கொண்டாடி வருகிறனர். #நாங்க வந்துட்டோம்னு சொல்லு எனும் ஹேஷ்டேக்கை பா.ஜ.க.வினர் டிரெண்ட் செய்து வருகின்றனர்.