ரஷ்யா மற்றும் உக்ரைன் இடையே கடுமையான போர் பதற்றம் ஏற்பட்டுள்ளது. இந்த நிலையில் அந்நாட்டில் சிக்கியுள்ள இந்தியர்கள் மற்றும் மாணவர்களை மீட்கும் பணியில் மத்திய அரசு தீவிரமான நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது. அந்த வகையில், 219 இந்தியர்களுடன் மும்பைக்கு முதல் விமானம் ருமேனியாவில் இருந்து புறப்பட்டுள்ளது.
ரஷ்யா மற்றும் உக்ரைன் இடையே கடுமையான போர் பதற்றம் ஏற்பட்டதை அடுத்து இந்தியர்கள் அனைவரும் உடனே அந்நாட்டை விட்டு வெளியேறுமாறு மத்திய அரசு கடந்த பிப் 15-தேதியே வலியுறுத்தி இருந்தது. அதனை தொடர்ந்து, பல்வேறு நடவடிக்கைகளை மோடி தலைமையிலான அரசு இன்று வரை தீவிரமாக மேற்கொண்டு வருகிறது.
விமானங்கள் தனது நாட்டு எல்லைக்குள் பறக்க உக்ரைன் அரசு தடை செய்திருப்பதால். ஹங்கேரி, போலந்து, ஸ்லோவாக் குடியரசு மற்றும் ருமேனியாவின் வழியாக இந்தியர்களை அழைத்து வந்து அங்கிருந்து விமானம் மூலம் இந்தியர்களை மீட்கும் பணியை மத்திய அரசு தீவிரப்படுத்தியுள்ளது. மோடி தலைமையிலான அரசு பல்வேறு நடவடிக்கைகளை மேற்கொண்டு வரும் சூழலில், உக்ரைனில் சிக்கியுள்ள தமிழர்களை போலந்து, பெலாரஸ் வழியாக மீட்க முயற்சி மேற்கொள்ளப்படும் என்று அமைச்சர் செஞ்சி மஸ்தான் இதிலும் ஸ்டிக்கர் ஒட்டும் முயற்சியில் ஈடுபட்டதற்கு பலரும் கடும் கண்டனம் தெரிவித்து இருந்தனர். இந்த நிலையில் 219 இந்தியர்களுடன் மும்பைக்கு முதல் விமானம் ருமேனியாவில் இருந்து புறப்பட்டுள்ளதாக இந்திய வெளியுறவு அமைச்சர் ஜெய்சங்கர் குறிப்பிட்டுள்ளார்.