ரஷ்யா மற்றும் உக்ரைன் இடையே போர் தீவிரமடைந்துள்ளது. அங்கு சிக்கியுள்ள இந்தியர்களை, மத்திய அரசு மிகுந்த கவனத்துடன் திரும்பி அழைத்து வருகிறது. அந்த வகையில், தமிழகம் திரும்பிய மாணவர்களை விமான நிலையத்திற்கு நேரில் சென்று வரவேற்ற அமைச்சர். இதற்கு முதல்வர் ஸ்டாலின் தான் காரணம் என்று கூறி இருப்பதற்கு, அ.தி.மு.க மூத்த தலைவர் கடும் கண்டனம் தெரிவித்துள்ளார்.
இந்தியா மற்றும் பல்வேறு உலக நாடுகள் போரை உடனே நிறுத்துமாறு, இருநாட்டிற்கும் தொடர்ந்து கோரிக்கை வைத்து வருகிறது. மேலும், அந்நாட்டில் சிக்கியுள்ள தங்கள் நாட்டு குடிமக்களை மீட்கும் பணியில் பல நாடுகள் தீவிரம் காட்டி வருகிறது அந்த வகையில், இந்தியாவும் களத்தில் இறங்கி இந்தியர்களை மீட்கும் பணியில் தீவிரம் காட்டி வருகிறது.
மத்திய அரசின் இந்த பெரும் முயற்சிக்கு, மாணவர்கள், அவர்களின் பெற்றோர்கள் மற்றும் சமூக ஆர்வலர்கள் பாரதப் பிரதமர் மோடிக்கு நன்றி தெரிவித்து வருகின்றனர். ஆனால், தமிழக முதல்வர் ஸ்டாலின் வழக்கம் போல, மத்திய அரசின் நடவடிக்கையில் ஸ்டிக்கர் ஒட்டும், பணியையே மேற்கொண்டு வருகிறார் என்ற குற்றச்சாட்டு நிலவி வருகிறது. அந்த வகையில், மதுரை அதிமுக தகவல் தொழில்நுட்ப பிரிவு செயலாளரும் அக்கட்சியின் மூத்த தலைவருமான ராஜ் சத்யன் தனது ட்விட்டர் பக்கத்தில் அமைச்சர் செஞ்சி மஸ்தானுக்கு எதிராக தனது கருத்தினை இவ்வாறு பதிவு செய்துள்ளார். கொஞ்சம் கூட வெட்கப்படவே மாட்டிர்களா அமைச்சரே முதல்வர் ஸ்டாலின் என்ன ரஷ்ய அதிபர் புதினுடன் பேச்சு வார்த்தை நடத்தினாரா?இல்லை நீங்கள் முன்பு வைத்திருந்த ஸ்பைஸ்ஜெட் அனுப்பி மீட்டாரா? பூங்கொத்து கொடுத்ததும் , போட்டோ எடுத்ததும் தான் உங்களுடைய அதிகப்பட்ச முயற்சி. என்று கடுமையாக சாடியுள்ளார்.