மம்தா பேனர்ஜி தலைமையில் மேற்கு வங்கத்தில் ஆட்சி நடைபெற்று வருகிறது. இவர், பதவி ஏற்ற நாளில் இருந்தே பா.ஜ.க தொண்டர்கள் மற்றும் அப்பாவி மக்கள் மீது தொடர்ச்சியான தாக்குதல்கள் நிகழ்ந்து வருகிறது. அந்த வகையில், பா.ஜ.க-வின் மூத்த தலைவர் மீது கொலை வெறி தாகுதல் இன்று நடத்தப்பட்டுள்ளது.
மம்தா பேனர்ஜி மேற்கு வங்கத்தில் முதல்வராக பதவியேற்ற பின்பு, தமிழகம் போன்றே சட்டம் ஒழுங்கு தொடர்ந்து அங்கு சந்தி சிரித்து வருகிறது. அந்த வகையில், சமூக ஆர்வலர்கள், பா.ஜ.க தொண்டர்கள், நிர்வாகிகள் மற்றும் அப்பாவி பொதுமக்கள் மீது கொடூரமான அடக்குமுறையை மேற்கொண்டு வருகிறார் மம்தா. மத்திய வெளியுறவு மற்றும் நாடாளுமன்ற விவகாரங்களுக்கான அமைச்சர் முரளிதரன் மேற்கு வங்க நிலைமையை ஆய்வு செய்வதற்காக சமீபத்தில் அம்மாநிலத்திற்கு சென்று இருந்தார்.
அப்பொழுது, ஆளும் கட்சியை சேர்ந்த குண்டர்கள் அமைச்சரின் காரை வழிமறித்து கடுமையான முறையில் தாக்குதல் நடத்திய சம்பவம் இந்தியா முழுவதும் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி இருந்தது. இப்படியாக, மம்தா பேனர்ஜி அரசு பா.ஜ.க-வினர் மீதும் அவர்களுக்கு, ஆதரவு தெரிவிக்கும் நபர்கள் மீதும் தொடர்ந்து இன்று வரை தாக்குதல் நடத்தப்பட்டு வருகிறது. இந்த நிலையில், ஹூக்ளியின் முன்னாள் மாநிலத் துணைத் தலைவரும், தற்பொழுதைய மாவட்டத் தலைவருமான கிருஷ்ண பட்டாச்சார்யா மீது திரிணாமுல் காங்கிரஸ் கட்சியை சேர்ந்த குண்டர்கள் அவரை ஒரு பெண் என்றும் பாராமல் இரக்கமின்றி அவர் மீது தாக்குதலை நடத்தியுள்ளனர்.