தமிழகத்தில் நடந்து முடிந்த உள்ளாட்சி தேர்தலில், பா.ஜ.க பல்வேறு இடங்களில் வெற்றி பெற்று தனது தடத்தை பதிவு செய்துள்ளது. அந்த வகையில், பதவி பிரமாணம் செய்துக் கொண்ட பா.ஜ.க மாமன்ற உறுப்பினர்கள் ஜெய்ஹிந்த் பாரத பிரதமர் மோடி வாழ்க என்று கோஷம் எழுப்பினர் என்பது குறிப்பிடத்தக்கது.
பணவெறி, படை பலம், அதிகார திமிர் என அனைத்தையும் பயன்படுத்தி, கடந்த பிப்-19 அன்று உள்ளாட்சி தேர்தலை ஆளும் தி.மு.க அரசு நடத்தியது. அனைவரும் எதிர்பார்த்த படியே தி.மு.க கூட்டணி அதிக இடங்களில் வென்றது. ஜனநாயக படுகொலையை நிகழ்த்தியே இந்த வெற்றியை ஆளும் கட்சி பதிவு செய்தது என்பது மக்களின் கடும் குற்றச்சாட்டாக உள்ளது. அந்த வகையில், ஓட்டிற்கு பணமோ, பரிசு பொருளோ, பிரியாணி பொட்டலமோ என எதனையும் வழங்காமல். நேர்மையான வேட்பாளர்களை களத்தில் இறக்கி, 300-க்கும் மேற்பட்ட இடங்களில் அமோக வெற்றி பெற்று 3-வது பெரிய கட்சியாக பா.ஜ.க உருவெடுத்துள்ளது.
ஆளும் கட்சியின் ஆசி பெற்ற பத்திரிக்கையாளர்கள், நெறியாளர்கள், கம்யூனிஸ்ட், காங்கிரஸ் கட்சி என அனைத்து கட்சிகளின் மிக கடுமையான விமர்சனங்கள் மற்றும் வெறுப்பு பிரச்சாரங்களை தாண்டி மக்களின் நம்பிக்கையை பெற்று தனது தடத்தை பல்வேறு மாவட்டங்களில் பா.ஜ.க பதிவு செய்துள்ளது. இந்த நிலையில், பா.ஜ.க மாமன்ற உறுப்பினர்களாக பதவி பிரமாணம் செய்துக் கொண்ட அனைவரும் ’ஜெய்ஹிந்த்’, ’பாரத பிரதமர் மோடி வாழ்க’ என்று கோஷம் எழுப்பி இருந்தனர் என்பது குறிப்பிடத்தக்கது.