தமிழக முதல்வர் ஸ்டாலின் பள்ளி மாணவன் அப்துல்கலாம் குடும்பத்திற்கு வீடு வழங்கி இருந்தார். இது மத்திய அரசின் திட்டத்தின் கீழ் வழங்கப்பட்ட வீடு என்ற செய்தி மக்கள் மத்தியில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தி இருந்தது. அந்த வகையில், மாணவன் ஜூனியர் ஆர்டிஸ்ட் என்ற செய்தி தற்பொழுது வெளிச்சத்திற்கு வந்துள்ளது.
சமூக ஊடகங்களால் பெரிதும் பேசப்பட்ட நரிக்குறவர் இனத்தை, சேர்ந்த அஸ்வினி என்பவருக்கு தமிழக முதல்வர் ஸ்டாலின் சமீபத்தில் வீடு வழங்கி இருந்தார். தமிழக மக்கள் யாரும் அஸ்வினி-யின் பெயரை அவ்வளவு எளிதில் மறந்திருக்க முடியாது. ஏன்னெனில், தி.மு.க-வின் ஆசிபெற்ற ஊடகங்கள், பத்திரிக்கையாளர்கள், நெறியாளர் மற்றும் யூ-டியூப் சேனல்கள் வரை இவரே பேசு பொருளாக மாறி இருந்தார். அஸ்வினி கேட்டு கொண்டதற்கு இணங்க தமிழக அரசு அவருக்கு வீடு வழங்கி இருந்தது. ஸ்டாலின் முதல்வராக பொறுப்பேற்ற நாளில் இருந்தே, ஸ்டிக்கர் ஒட்டும் பணியை மிகச் சிறப்பாக செய்து வருவதாக குற்றச்சாட்டு குவிந்த வண்ணம் இருந்தது.
அதனை மெய்ப்பிக்கும் விதமாக, மத்திய அரசினுடைய முத்ரா கடன் மற்றும் சுவா நிதி திட்டத்தின் கீழ், சகோதரி அஸ்வினிக்கு உதவிய தமிழக முதல்வருக்கு எனது பாராட்டுக்கள் என்று, தி.முக அரசின் ஸ்டிக்கர் ஒட்டும் முயற்சியை, தடுத்து நிறுத்தி இருந்தார், தமிழக பா.ஜ.க தலைவர் அண்ணாமலை. இது தவிர, சமூக ஊடகங்களால் அப்துல் கலாம் என்னும் மாணவன் குறித்து அதிகம் பேசப்பட்டது. மனிதநேயம் குறித்து இவன் பேசிய பேச்சு தமிழக மக்களிடையே பெரும் வரவேற்பை பெற்று இருந்தது. அதனை தொடர்ந்து, தமிழக முதல்வர் ஸ்டாலின் மாணவனை தலைமை செயலகத்திற்கு வரவழைத்து பாராட்டி இருந்தார். மேலும், அவன் குடும்பத்திற்கு தமிழக அரசு சார்பில், வீடு வழங்கி இருந்தார் முதல்வர் ஸ்டாலின்.
ஆனால், அப்துல் கலாமிற்கு வழங்கப்பட்ட வீடு, பாரத பிரதமரின் அனைவருக்கும் வீடு” திட்டத்தின் கீழ், கட்டப்பட்ட வீட்டைத்தான் முதல்வர் தனது பெயரில் ஸ்டிக்கர் ஒட்டி வழங்கி இருக்கிறார். என்ற செய்தி பொதுமக்கள் மத்தியில் பெரும் அதிர்ச்சியையும், கோவத்தையும் ஏற்படுத்தி இருந்தது. இந்த நிலையில் தான், மாணவன் அப்துல் கலாம் ஒரு ஜூனியர் ஆர்டிஸ் என்ற செய்தி தற்பொழுது வெளிச்சத்திற்கு வந்துள்ளது. நடிப்பில் ஆர்வம் கொண்ட இந்த மாணவனுக்கு யார்? வசனம் எழுதி கொடுத்தது. இயக்குனர் அமீர் அதிக முக்கியத்துவத்தை ஏன்? இந்த மாணவனுக்கு வழங்கினார் என பலர் கேள்வி எழுப்பி வருகின்றனர்.