மோடியை புகழும் சீனா, பாக்: பெண் கேப்டன் ராதிகா!

மோடியை புகழும் சீனா, பாக்: பெண் கேப்டன் ராதிகா!

Share it if you like it

உலக மகளிர் தினத்தை முன்னிட்டு, பல்துறைகளில் சாதனை புரிந்த, பெண்மணிகளை இன்று பாரதப் பிரதமர் மோடி சந்தித்தார். அப்பொழுது, கடற்படை கேப்டன் தனது அனுபவத்தை பகிர்ந்து கொண்ட காணொளி தற்பொழுது சமூக வலைத்தளங்களில் வைரலாக துவங்கியுள்ளது.

இந்திய வணிகக் கடற்படை கேப்டனாக இருப்பவர் ராதிகா மேனன். 2015 – ஆம் ஆண்டு வங்கக் கடலில், மூழ்கிய படகில் இருந்து ஏழு மீனவர்களை வியக்க தக்க முறையில் காப்பாற்றியவர். அந்த வகையில், இவருக்கு வீரத்திற்கான விருது வழங்கப்பட்டது. இவ்விருதினை பெற்ற முதல் பெண்மணியும் ஆவார். உலக மகளிர் தினமான இன்று, பாரதப் பிரதமர் மோடியை சந்தித்தார். அப்பொழுது, தனது அனுபவத்தை அவரிடம் பகிர்ந்து உள்ளார் ராதிகா மேனன். நீங்கள் பிரதமராக வந்த பொழுது நிறைய அனுபவங்கள் கிடைத்தது. அதனை உங்களிடம், பகிர்ந்து கொள்ள விரும்புகிறேன்.

நான் சீனா, பாகிஸ்தான், அல்லது நமக்கு நல்லுறவில் இல்லாத நாட்டிற்குச் செல்லும் பொழுது எல்லாம். அவர்கள் என்னிடம் ‘உங்களுக்கு மிகவும் வலிமையான தலைவர் இருக்கிறார்’ என்று சொல்வார்கள். நான் மிகவும் மகிழ்ச்சியாக அடைகிறேன் மிகவும் பெருமைப்படுகிறேன்” என்று கேப்டன் ராதிகா மேனன் குறிப்பிட்டு உள்ளார்.

முந்தைய காங்கிரஸ் அரசை காட்டிலும், பாரதப் பிரதமராக மோடி பொறுப்பு ஏற்றுக்கொண்ட பின்பு, இந்தியாவின் மதிப்பு பெரும் அளவில் உயர்ந்து உள்ளது என்பதில், யாருக்கும் மாற்று கருத்து இருக்க முடியாது. வல்லரசு நாடுகளே, இந்தியா தவிர்க்க முடியாத சக்தி என்பதை தற்பொழுது நன்கு உணர்ந்து உள்ளது. நம்மோடு எல்லைகளை பகிர்ந்து கொள்ளும் சீனா, பாகிஸ்தான் போன்ற நாடுகள் மோடியை பார்த்து அலறுவதின் மூலம் இந்தியாவின் வலிமையை நாம் அறிந்து கொள்ள முடியும் என நெட்டிசன்கள் கருத்து தெரிவித்து வருகின்றனர்.


Share it if you like it