தமிழர்களுக்கு ஏன் வேலை தருவதில்லை என்பதை மிகவும் தெளிவாக விளக்கி இருக்கிறார் ஒரு தொழிலதிபர்.
தமிழ்நாட்டை பொறுத்தவரை, தற்போது ஹோட்டல் வேலை முதல் கட்டட வேலைவரை வடநாட்டுக்காரர்களின் ஆதிக்கம்தான் இருக்கிறது. இதனால், தமிழ்நாட்டில் தமிழர்களுக்கு வேலை கிடைக்கவில்லை. எல்லா வேலையையும் வடநாட்டுக்காரர்கள் ஆக்கிரமித்து விட்டார்கள் என்ற புலம்பல் சத்தம் நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. ஆனால், உண்மையில் தமிழர்களுக்கு ஏன் வேலை கிடைப்பதில்லை என்பது யாருமே சிந்திப்பதில்லை. அதேசமயம், தமிழர்களுக்கு வேலை கிடைக்காததற்கான காரணம் என்ன என்பது முதலாளிகளுக்கு நன்றாகவே தெரியும். ஆனால், இதை யாரும் தைரியமாக வெளியில் சொல்வதில்லை. அப்படிச் சொன்னால் தங்களது தொழிலுக்கு பாதிப்பு ஏற்பட்டு விடுமோ என்கிற அச்சம்தான் காரணம். எனினும், தமிழர்களுக்கு ஏன் தருவதில்லை என்பதை மிகவும் தெளிவாகவும், தைரியமாகவும் விளக்கி இருக்கிறார் ஒரு தொழிலதிபர்.
இது தொடர்பாக, ஒரு தனியார் யூடிப்பர் வெளியிட்டிருக்கும் பேட்டியில் அந்த தொழிலதிபர் கூறியிருப்பதாவது:- “தமிழர்களுக்கு வேலை கொடுத்தால் நிறைய பிரச்னைகளை எதிர்கொள்ள வேண்டி இருக்கிறது. உதாரணமாக, அக்கா மகளுக்கு காதுகுத்து, தங்கை மகளுக்கு காதுகுத்து, ஆயாவுக்கு உடம்பு சரியில்லை என்பன போன்ற ஏதாவது காரணங்களைச் சொல்லி அடிக்கடி லீவு எடுத்து விடுகிறார்கள். அதேபோல, நம்மிடம் தொழிலை கற்றுக்கொண்ட பிறகு, அடுத்த இடத்துக்குச் சென்று தொழில் தெரியும் என்று சொல்லி கூடுதல் சம்பளம் கேட்டு பேரம் பேசுகிறார்கள். மேலும், கூடுதல் சம்பளம் கேட்டு நச்சரிக்கிறார்கள். தரமறுத்தால் நமது தொழிலுக்கு ஊறுவிளைவித்து விடுகிறார்கள்.
எல்லாவற்றும் மேலாக, மாலை நேரமாகிவிட்டால். ஒயின் ஷாப்புகளைத் தேடிச் சென்று விடுகிறார். கல்யாணம் என்றாலும் பார்ட்டி, காதுகுத்து என்றாலும் பார்ட்டி, காதலில் வெற்றி என்றாலும் பார்ட்டி, தோல்வி என்றாலும் பார்ட்டி, கடா வெட்டு என்றாலும் பார்ட்டி என எப்போது பார்த்தாலும் சாராயக்கடை வாசலிலேயே கிடக்கிறார்கள். இதனால், நமது தொழில் பாதிக்கிறது. இதைவிட வேடிக்கை என்னவென்றால், லாக்டவுன் சமயத்தில் வீட்டிலேயே சாராயம் காய்ச்சத் தொடங்கி விட்டார்கள். இப்படி ஆட்களை வைத்துக் கொண்டு எப்படி நாம் வேலை வாங்க முடியும்.
அதேசமயம், வடநாட்டுக்காரர்களைப் பொறுத்தவரை, சொந்த ஊரிலிருந்து மூட்டை முடிச்சுகளை கட்டிக் கொண்டு வந்து விடுகிறார்கள். குறைந்தது ஆறு மாதம் முதல் ஒரு ஆண்டு வரை ஊருக்குச் செல்வதில்லை. அதேபோல, எந்தக் காரணமும் சொல்லி லீவும் கேட்பதில்லை. மேலும், நம்மிடம் தொழில் கற்றுக் கொண்டாலும், அடுத்தவர்களிடம் சென்று கூடுதல் சம்பளம் கேட்டு பேரம் பேசுவதில்லை. குறிப்பாக, யாரும் தண்ணி அடிப்பதில்லை. அதிகபட்சமாக அவர்களிடம் இருக்கும் பழக்கம் பான் மசாலா போடுவது மட்டும்தான். இதனால் எந்த வகையிலும் நமது தொழில் பாதிக்கப்படுவதில்லை” என்று தமிழகர்களுக்கு வேலை தராதற்கான காரணத்தை புட்டுப்புட்டு வைத்திருக்கிறார். மேலும், தமிழர்களுக்கு ஏன் வேலை தருவதில்லை என்று கேட்கும் போலி போராளிகளுக்கும் சவுக்கடி கொடுத்திருக்கிறார். இந்தக் காணொளிதான் தற்போது சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகிறது.
இதைப்பார்த்துவிட்டாவது தமிழர்கள் திருந்துவார்களா பார்ப்போம்!