தி காஷ்மீர் ஃபைல்ஸ் ஈழத்தைவிட மோசமான இனப்படுகொலை என்று பா.ஜ.க. செய்தித் தொடர்பாளர் அஸ்வத்தாமன் கூறியிருக்கிறார்.
இந்தியாவின் மிக அருகில் உள்ள நாடான இலங்கையில் ஏற்பட்ட உள்நாட்டுப் போரில், லட்சக் கணக்கான அப்பாவித் தமிழர்கள் கொத்துக் கொத்தாக கொல்லப்பட்டனர். அப்போது, மத்தியில் காங்கிரஸ் கட்சியும், மாநிலத்தில் தி.மு.க.வும் ஆட்சியில் இருந்தன. முன்னாள் பிரதமரும், காங்கிரஸ் கட்சியின் தலைவருமான ராஜிவ் காந்தியை கொலை செய்ததால், விடுதலைப் புலிகள் அமைப்பு மீது காங்கிரஸ் கட்சி ஆத்திரத்தில் இருந்தது. ஆனால், தமிழர்களுக்கு நாங்கள்தான் தலைவர் என்று மார்தட்டிக் கொண்டிருந்த தி.மு.க. தலைவரும், அப்போதைய தமிழக முதல்வருமான கருணாநிதி இப்போரை தடுத்து நிறுத்த எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை. அதேசமயம், மெரீனாவில் மிகப்பெரிய நாடகத்தை அரங்கேற்றினார். இதை யாரும் மறந்திருக்க முடியாது. ஆகவே, இலங்கையில் நிகழ்ந்த இனப்படுகொலைக்கு முக்கியக் காரணமே தி.மு.க. மற்றும் காங்கிரஸ் என்பதுதான் அனைவரின் கூற்றும்.
அந்த வகையில், இஸ்லாமிய அடிப்படைவாதிகளால் காஷ்மீர் மக்களுக்கு நிகழ்ந்த கொடுமைகளை கண்டும் காணாமல் கண்மூடிக் கொண்டதும் இதே காங்கிரஸ் அரசுதான் என்பது கசப்பான உண்மை. இந்தநிலையில்தான், பிரபல திரைப்பட இயக்குனர் விவேக் ரஞ்சன் அக்னிஹோத்ரி, காஷ்மீரில் நிகழ்ந்த கொடூரங்களையும், அட்டூழியங்களையும் மையமாக வைத்து ”தி காஷ்மீர் பைல்ஸ்” என்ற திரைப்படத்தை எடுத்தார். இத்திரைப்படம் சமீபத்தில் திரையரங்கிற்கு வந்தது. இப்படம் ஹிந்துக்கள், சீக்கியர்கள், கிறிஸ்தவர்கள் மற்றும் அப்பாவி பண்டிட்கள் இஸ்லாமிய அடிப்படைவாதிகளிடம் சிக்கிக் கொண்டு அனுபவித்த கொடுமைகளை விவரிக்கிறது. ஜாதி, மதம் மற்றும் அரசியலை கடந்து இத்திரைப்படம் இந்திய மக்களிடையே மிகப்பெரிய வலியை ஏற்படுத்தி இருக்கிறது என்பதில் யாருக்கும் ஐயம் இருக்க முடியாது.
இத்திரைப்படம் குறித்து பா.ஜ.க. மூத்த தலைவரும், செய்தித் தொடர்பாளருமான அஸ்வத்தாமன் கூறிகையில், இலங்கையில் நிகழ்ந்த இனப்படுகொலையை விட, காஷ்மீரில் மோசமான இனப்படுகொலை நிகழ்ந்துள்ளது என்று தனது வேதனையை வெளிப்படுத்தியுள்ளார்.
அஸ்வத்தாமன் பேசிய காணொளி லிங்க் இதோ.