ஹிஜாப் விவகாரம்: நெறியாளர் கேள்விக்கு ’மாஸ்’ பதில் அளித்த – ஸ்ரீஜித் பணிக்கர்!

ஹிஜாப் விவகாரம்: நெறியாளர் கேள்விக்கு ’மாஸ்’ பதில் அளித்த – ஸ்ரீஜித் பணிக்கர்!

Share it if you like it

ஹிஜாப் விவகாரம் தொடர்பாக, பிரபல மலையாள ஊடகமான ஏசியா நெட் நீயூஸில் விவாதம் நடைபெற்றது. இதில், பல விருந்தினர்கள் கலந்து கொண்டனர், அதில் முக்கியமானவர் ஸ்ரீஜித் பணிக்கர். இவரிடம் நெறியாளர் எழுப்பிய கேள்விக்கு அவர் அளித்த பதில் மக்கள் மத்தியில் பெரும் வரவேற்பை பெற்றுள்ளது.

கர்நாடக மாநிலம் உடுப்பியிலுள்ள பி.யூ, கல்லூரியில் பயிலும் இஸ்லாமிய அடிப்படைவாத மாணவிகள், கடந்த ஜனவரி மாதம் முதல் திடீரென ஹிஜாப், பர்தா, புர்கா ஆகிவற்றை அணிந்து வரத் தொடங்கினர். இதற்கு, கல்வி நிறுவனங்கள் கடும் எதிர்ப்புத் தெரிவித்து இருந்தன. இது எங்கள் உரிமை என்று கல்லூரி நிர்வாகத்திற்கு, எதிராக மாணவிகள் கோஷம் எழுப்ப துவங்கினர். இதற்கு, ஆதரவாக அடிப்படைவாத அமைப்பினர் தர்ணாவில் ஈடுபட்டனர். இதனை தொடர்ந்து, எங்களுக்கும் காவித்துண்டு, காவி ஷால் அணிந்து வர அனுமதி வேண்டும் என ஹிந்து மாணவ, மாணவிகள் போர்க்கொடி உயர்த்தினர். நாடு முழுவதும் இச்சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி இருந்தது.

இதைத் தொடர்ந்து, பள்ளி, கல்லூரிகளில் ஹிஜாப், பர்தா, புர்கா அணிய தடைவிதித்தது கர்நாடக மாநில அரசு. இதன் காரணமாக, இரு தரப்பினர் மத்தியில் மோதல் உருவாகும் அபாயம் நிலவியது. இதன் தொடர்ச்சியாக, பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை மற்றும் 144 தடை உத்தரவு பிறப்பிக்கப்பட்டது. இதனை அடுத்து, கர்நாடக உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடுத்தனர் அடிப்படைவாத அமைப்பை சேர்ந்தவர்கள். இந்த நிலையில் தான், ஹிஜாப் இஸ்லாத்தின் அத்தியாவசிய நடைமுறை அல்ல என்று கர்நாடக மாநில ஐகோர்ட் சமீபத்தில் அதிரடி தீர்ப்பினை வழங்கி இருந்தது.

கர்நாடக உயர்நீதிமன்றத்தின் இந்த தீர்ப்பு நாடு முழுவதும் பேசுபொருளாக மாறியிருந்தது. வழக்கம் போல, தமிழக ஊடகங்கள் கப்சிப். அந்த வகையில், ஹிஜாப் விவகாரம் தொடர்பாக, பிரபல மலையாள ஊடகமான ஏசியா நெட் நீயூஸில் விவாதம் நடைபெற்றது. இதில் கலந்து கொண்ட பிரபல அரசியல் விமர்சகர் ஸ்ரீஜித் பணிக்கரிடம் நெறியாளர் எழுப்பிய கேள்வியும் அதற்கு அவர் அளித்த பதிலும் இதோ.

ஏசிநெட் நெறியாளர் : சீருடை அமல்படுத்தப்பட்ட கல்வி நிறுவனங்களில் ஹிஜாப்புக்கு தடை என்றால் ஹிந்து மாணவர்கள் நெற்றியில் பொட்டு வைப்பதற்கும் கையில் கயிறு கட்டுவதற்கும் தடை விதிக்காதது ஏன்..?? ஸ்ரீஜித் பதில்: அப்படி என்றால் கிறிஸ்தவ மாணவர்கள் கழுத்தில் அணியும் சிலுவையும், சீருடை அமல்படுத்தப்பட்ட கிறிஸ்தவ பள்ளிக்கூடங்களில், பயிலும் இஸ்லாமிய மாணவர்களின், நெற்றியில் உள்ள நமாஸ் செய்த தழும்பையும் தடை செய்ய வேண்டி இருக்குமே? என்று பதில் அளித்திருந்தார். இவரின் இந்த பதிலை கேட்டு நெறியாளர் உட்பட அடிப்படைவாதிகளும் நிச்சயம் கடுப்பாகி இருப்பார்கள் என நெட்டிசன்கள் கருத்து தெரிவித்து வருகின்றனர்.


Share it if you like it