சமீபத்தில் வெளியான ‘தி காஷ்மீர் ஃபைல்ஸ்’ திரைப்படத்தைப் பார்த்துவிட்டுத் திரும்பிய ஹிந்து இளைஞர்கள் மீது, இஸ்லாமிய அடிப்படைவாத அமைப்பினர் தாக்குதல் நடத்திய சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி இருக்கிறது.
நாடு முழுவதும் கடந்த மார்ச் 11-ம் தேதி வெளியானது ‘தி காஷ்மீர் ஃபைல்ஸ்’ திரைப்படம். காஷ்மீர் பள்ளத்தாக்கில் வசித்து வந்த ஹிந்து பண்டிட்கள் உள்ளிட்ட சிறுபான்மையினர் இஸ்லாமிய அடிப்படைவாத அமைப்பைச் சேர்ந்த தீவிரவாதிகளால் எப்படியெல்லாம் சித்ரவதைப் படுத்தப்பட்டார்கள், இனப்படுகொலை செய்யப்பட்டார்கள் என்பதை இப்படம் வெளிச்சம் போட்டுக் காட்டி இருக்கிறது. எனவே, இப்படம் நாடு முழுவதும் பெரும் வரவேற்பைப் பெற்று சக்கைப்போடு போட்டுவருகிறது. இப்படத்தை பார்த்துவிட்டு திரும்புபவர்கள் அனைவருமே கண்கள் குளமாகிய நிலையிலேயே வெளியே வருகின்றனர். இப்படத்தை பார்த்துவிட்டு திரும்பிய காஷ்மீரி பண்டிட்கள் பலரும் இயக்குனர் விவேக் அக்னி ஹோத்ரியின் காலில் விழுந்து கதறி அழுததை நினைத்தாலே நெஞ்சம் பதைபதைக்கிறது.
இந்த நிலையில்தான், உத்தரப் பிரதேச மாநிலத்தில் ‘தி காஷ்மீர் ஃபைல்ஸ்’ படத்தை பார்த்துவிட்டு தியேட்டரில் இருந்து வெளியே வந்த ஹிந்து இளைஞர்கள் 3 பேரை இஸ்லாமிய அடிப்படைவாத அமைப்பைச் சேர்ந்தவர்கள் கத்தி, கட்டை உள்ளிட்ட பயங்கர ஆயுதங்களால் தாக்கி இருக்கிறார்கள். உத்தரப் பிரதேச மாநிலம் குஷிநகர் மாவட்டம் ஃபாசில்நகர் பகுதியைச் சேர்ந்தவர்கள் சச்சின், கிருஷ்ணா மற்றும் சாஹேல் ஆகியோர். இவர்கள் 3 பேரும் சேர்ந்து ஹோலி பண்டிகை தினமான மார்ச் 18-ம் தேதி “தி காஷ்மீர் ஃபைல்ஸ்’ படத்தை பார்க்கச் சென்றிருக்கிறார்கள். படம் முடிந்து வெளியே வந்தவர்கள், பாரத் மாதா கீ ஜெய் என்று கோஷம் எழுப்பியபடி வந்திருக்கிறார்கள்.
இதனால், ஆத்திரமடைந்த அப்பகுதி முஸ்லிம்கள், ஹிந்து இளைஞர்களுடன் வாக்குவாதத்தில் ஈடுபட்டிருக்கின்றனர். வாக்குவாதம் முற்றிய நிலையில், தாங்கள் வைத்திருந்த கத்தி, கட்டை மற்றும் பயங்கர ஆயுதங்களால் ஹிந்து இளைஞர்கள் மூவரையும் சரிமாரியாகத் தாக்கி இருக்கிறார்கள். இதில் பலத்த காயமடைந்த 3 பேரும் ஃபாசில்நகர் தொகுதியிலுள்ள சமூக சுகாதார மையத்திற்கு சென்றிருக்கிறார்கள். அங்கு அவர்களுக்கு முதலுதவி சிகிச்சை அளிக்கப்பட்ட நிலையில், மேல் சிகிச்சைக்காக அருகிலுள்ள மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். இதுகுறித்து பாதர்வா போலீஸார் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். குற்றவாளிகளை தேடும் பணி நடந்து வருவதாக போலீஸ் அதிகாரி அகிலேஷ் குமார் சிங் தெரிவித்திருக்கிறார்.