தாலிக்கு தங்கமும் போச்சு… திருமண நிதியுதவியும் போச்சு… மகளிருக்கு தி.மு.க.வின் பட்ஜெட் ‘அல்வா’!

தாலிக்கு தங்கமும் போச்சு… திருமண நிதியுதவியும் போச்சு… மகளிருக்கு தி.மு.க.வின் பட்ஜெட் ‘அல்வா’!

Share it if you like it

தமிழக பட்ஜெட்டில் தாலிக்கு தங்கம், திருமண நிதியுதவி உள்ளிட்ட பெண்களுக்கான பல்வேறு திட்டங்கள் இடம் பெறாததால், தி.மு.க. அரசு மீது பெண்கள் கடும் அதிருப்தி மற்றும் ஆத்திரத்தில் இருக்கிறார்கள்.

தி.மு.க. தலைமையிலான தமிழக அரசின் 2022 – 2023-ம் ஆண்டுக்கான பட்ஜெட்டை, நிதியமைச்சர் பி.டி.ஆர்.பழனிவேல் தியாகராஜன் கடந்த 18-ம் தேதி தாக்கல் செய்தார். இது திராவிட மாடல் பட்ஜெட் என்று தி.மு.க. மற்றும் அதன் கூட்டணிக் கட்சிகளின் தலைவர்கள் மற்றும் உ.பிஸ். அடிமை ஊடகங்கள், கொத்தடிமை போராளிகள் என பலரும் வக்காலத்து வாங்கினர். ஆனால், உண்மையில் இந்த பட்ஜெட்டில் உருப்படியான எந்த அம்சமும் இல்லை என்பதுதான் அரசியல் பார்வையாளர்களின் கருத்து. காரணம், மத்திய அரசின் திட்டங்களுக்கெல்லாம் புதிய பெயரை சூட்டி, தங்களது திட்டம்போல ஸ்டிக்கர் ஒட்டிக் கொண்டது தி.மு.க. என்பதுதான் மத்திய பா.ஜ.க. அரசின் நிர்வாகிகள், தொண்டர்களின் வாதம்.

இது ஒருபுறம் இருக்க, மேற்படி பட்ஜெட்டில் மகளிருக்கான திட்டங்கள் எதுவுமே இடம்பெறாததுதான் பெண்களிடையே பெரும் ஏமாற்றித்தை ஏற்படுத்தி இருக்கிறது. உதாரணமாக, மூவாலூர் ராமாமிர்தம் அம்மையார் திருமண நிதியுதவித் திட்டம் என்பது நீண்ட நெடிய காலமாக வழங்கப்பட்டு வரும் நிதியுதவி திட்டமாகும். இத்திட்டத்தின்படி, திருமணமாகும் பெண்கள் 10, 12-ம் வகுப்பு படித்திருந்தால் 25,000 ரூபாயும், அதே பட்டப்படிப்பு படித்திருந்தால் 50,000 ரூபாயும் திருமண நிதியுதவியாக வழங்கப்படும். ஆனால், தற்போது தாக்கல் செய்யப்பட்ட பட்ஜெட்டில் இத்திட்டத்தை ரத்து செய்து விட்டார்கள்.

அதேபோல, திருமணம் செய்யும் ஏழைப் பெண்களுக்கு தாலிக்கு தங்கம் வழங்கும் திட்டமும் ரத்து செய்யப்பட்டிருக்கிறது. இத்திட்டத்தின்படி தாலிக்கு 1 பவுன் தங்கம் வழங்கப்பட்டு வந்தது. இதன் இன்றைய மதிப்பு 40,000 ரூபாய். இவ்விரு திட்டங்களின் படி ஆண்டுக்கு சுமார் 1 லட்சம் முதல் 1.25 லட்சம் பெண்கள்வரை பயனடைந்து வந்தனர். ஆனால், இத்திட்டங்களை ரத்து செய்துதான், 6 முதல் 12-ம் வகுப்பு வரை அரசு பள்ளிகளில் படித்துவிட்டு, உயர்கல்வி சேரும் மாணவிகளுக்கு மாதந்தோறும் 1,000 ரூபாய் உதவித் தொகை வழங்கப்படும் என்று தமிழக அரசு அறிவித்திருக்கிறது. ஆகவே, உண்மையைச் சொல்ல வேண்டுமானால் இவ்விரு திட்டங்களையும் ரத்து செய்ததின் மூலம் பல்லாயிரக்கணக்கான ஏழைகளின் வயிற்றில் அடித்திருக்கிறது தி.மு.க. அரசு.

இவை தவிர, ஜெயலலிதாவின் கனவுத் திட்டமான மகளிருக்கு ஸ்கூட்டம் வழங்கும் திட்டமும் ரத்து செய்யப்பட்டிருக்கிறது. மேலும், ஜெயலலிதா அறிமுகப்படுத்திய கிராமப்புற ஏழை பெண்களுக்கு கோழி, ஆடு, மாடு வழங்கும் திட்டமும் பட்ஜெட்டில் இடம்பெறவில்லை. குறிப்பாக, உயர்கல்வி பயிலும் மாணவ, மாணவிகளுக்கு வழங்கப்பட்டு வந்த மடிக்கணினி (லேப்டாப்) திட்டத்துக்கு தி.மு.க. அரசு மூடுவிழா நடத்தி விட்டது. தவிர, சமையல் கேஸ் சிலிண்டருக்கு 100 ரூபாய் மானியம் வழங்கப்படும் என்று கொடுத்த வாக்குறுதியும் பட்ஜெட்டில் இடம் பெறவில்லை. முக்கியமாக குடும்பத் தலைவிகளுக்கு மாதம்தோறும் 1,000 ரூபாய் உரிமைத்தொகை வழங்கப்படும் என்ற வாக்குறுதியும் நிறைவேற்றப்படவில்லை. இப்படி பெண்களுக்கான ஒட்டுமொத்த திட்டமும் பறிக்கப்பட்டு விட்டதால், தி.மு.க. அரசு மீது பெண்கள் ஆவேசமாக இருக்கிறார்கள். ஏன்டா, தி.மு.க.வுக்கு ஓட்டுப்போட்டோம் என்று நொந்து நூடுல்ஸாகி இருக்கிறார்கள்.


Share it if you like it