சொல்வது ஒன்று செய்வது ஒன்று – ஸ்டாலின் இரட்டை வேடம்!

சொல்வது ஒன்று செய்வது ஒன்று – ஸ்டாலின் இரட்டை வேடம்!

Share it if you like it

சென்னை மவுண்ட் – பூந்தமல்லி நெடுஞ்சாலையில் நடைபாதையை ஆக்கிரமித்து ஆளும் கட்சியினரால் வைக்கப்பட்டுள்ள பேனர்களுக்கு நெட்டிசன்கள் கடும் கண்டனம் தெரிவித்து வருகின்றனர்.

அ.தி.மு.க ஆட்சி நடைபெற்று கொண்டு இருந்த சமயத்தில், ஆளும் கட்சியை சேர்ந்த பிரமுகர் ஒருவர் தனது மகனின் திருமணத்திற்கு வரும் துணைமுதல்வர் ஓ. பன்னீர்செல்வத்தை வரவேற்கும் விதமாக துரைப்பாக்கம்-பல்லாவரம் சாலையில் டிஜிடல் பேனர்களை வைத்திருந்தார். அப்பொழுது, தனது இருசக்கர வாகனத்தில் வந்துகொண்டிருந்த, இளம் பெண் சுபஸ்ரீ மீது பேனர் ஒன்று சரிந்து விழுந்தது. இதில், அவர் நிலைதடுமாறி கீழே விழுந்தார். அச்சமயத்தில் அவரது வண்டியின் பின்புறம் வந்து கொண்டிருந்த தண்ணீர் லாரி அவர் மீது எறியதில் சம்பவ இடத்திலேயே அவர் பலியானார்.

தமிழக மக்களிடையே இச்சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தி இருந்தது. மேலும், பேனர் கலாச்சாரத்தை தமிழகத்தில் முற்றிலும் ஒழிக்க வேண்டும் என பலர் தங்களது கடும் கண்டனங்களை தெரிவித்து இருந்தனர். அதனை தொடர்ந்து, அப்பொழுது எதிர்க்கட்சி தலைவராக இருந்த ஸ்டாலின் சுபஸ்ரீ வீட்டிற்கு நேரில் சென்று அவரின் பெற்றோரை சந்தித்து ஆறுதல் கூறியிருந்தார். ஆளுங்கட்சியின் விளம்பர மோகத்தால் உயிரிழந்த சகோதரி சுபஸ்ரீ-ன் பெற்றோரை நேரில் சந்தித்து ஆறுதல் தெரிவித்தேன். நம்முடைய ஆறுதல்கள் அவர்களை தேற்றாது என்றபோதிலும், உயர்நீதிமன்றத்தில் திமுக சார்பில் பேனர் வைக்கப்படாது என்று தாக்கல் செய்த பிரமாண பத்திர உறுதிமொழியையே என் ஆறுதலாக கூறினேன் என்று தனது ட்விட்டர் பக்கத்தில் பதிவு செய்து இருந்தார்.

அந்த வகையில், தமிழகத்தில் ஆட்சி மாற்றம் ஏற்பட்டு, முதல்வராக ஸ்டாலின் பொறுப்பு ஏற்றுக்கொண்டார். அதன்பின்னர், சிறுபான்மையின மக்களின் பண்டிக்கைகள், திருமண நிகழ்ச்சிகள், அரசு விழாக்களில் சிறப்பு விருந்தினராக கலந்து கொள்ளும் உதயநிதி மற்றும் முதல்வர் ஸ்டாலினை வரவேற்கும் விதமாக தி.மு.க.வினர் பேனர் வைக்கும் சூழல் தற்பொழுது தமிழகத்தில் அதிகரித்து உள்ளது.

விழுப்புரத்தில் அமைச்சர் பொன்முடியை வரவேற்கும் விதமாக, கொடிக் கம்பம் பணியில் ஈடுபட்ட 13 வயது சிறுவன் தினேஷ் என்பவர் மின்சாரம் பாய்ந்து சமீபத்தில் உயிர் இழந்த சம்பவம் நாடு முழுவதும் பெரும் சோகத்தையும், அதிர்ச்சியையும் ஏற்படுத்தி இருந்தது. அதே போல, சேலம் மாவட்டம் தாதகாப்பட்டியில் பள்ளி சிறுமி மீது தி.மு.க.வின் கொடிக் கம்பம் விழுந்து அவரின் மூக்கு உடைந்த சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தி இருந்தது. இப்படியாக, தொடர்ச்சியான சம்பவங்கள் அரங்கேறி வரும் சூழலில், சென்னை மவுண்ட் – பூந்தமல்லி நெடுஞ்சாலையில் நடைபாதையை ஆக்கிரமித்து ஆளும் கட்சியினரால் வைக்கப்பட்டுள்ள பேனர்கள். குறித்த புகைப்படம் தற்பொழுது சமூக வலைத்தளங்களில் வைரலாக துவங்கியுள்ளது. எதிர்க்கட்சியாக இருக்கும் பொழுது சொல்வது ஒன்று ஆளும் கட்சியாக மாறிய பின்பு செய்வது ஒன்று என தி.மு.க.வையும் அக்கட்சியின் தலைவரையும் நெட்டிசன்கள் வறுத்தெடுத்து வருகின்றனர் என்பது குறிப்பிடத்தக்கது.

Image


Share it if you like it