கோவில் திருவிழாக்களை பா.ஜ.க எடுத்து நடத்துவது போல, இடது சாரிகளும் ஏன் விழாக்ககளை நடத்தக்கூடாது? என பத்திரிக்கையாளர் சந்திப்பில் சி.பி.எம். கட்சியின் மாநிலச் செயலாளர் கூறியுள்ளார். இவரும் சங்கியாக மாறிவிட்டாரா என நெட்டிசன்கள் கேள்வி எழுப்பி வருகின்றனர்
பாரதப் பிரதமராக மோடி பதவி ஏற்ற பின்பு, பல்வேறு மாநிலங்களில் நடைபெறும் தேர்தல்களில் அக்கட்சி வெற்றிகளை குவித்து வருகிறது. இதன் காரணமாக, அக்கட்சியை சேர்ந்த தொண்டர்கள் மிகுந்த உற்சாகத்தில் இருக்கின்றனர். அதே போல, தமிழக பா.ஜ.க தலைவராக அண்ணாமலை பொறுப்பு ஏற்றுக் கொண்ட பிறகு, தமிழகத்தில் பா.ஜ.க வேகமாக வளர்ந்து வருகிறது. அதன்படி, தமிழகத்தில் நடந்து முடிந்த நகர்ப்புற உள்ளாட்சித் தேர்தலில், பெரிய அளவில் அக்கட்சி மாஸ் காட்டியுள்ளது. அதாவது, மாநகராட்சி வார்டுகளில் 22 இடங்களில் வெற்றிபெற்றது. நகராட்சி வார்டுகளில் 59 இடங்களிலும், பேரூராட்சி வார்டுகளில் 242 இடங்களிலும் பா.ஜ.க. வெற்றிக் கனியை ருசித்தது. மொத்தத்தில் 323 இடங்களில் தனது வெற்றியை பதிவு செய்திருக்கிறது. குறிப்பாக, தமிழகம் முழுவதுமே பரவலாக வெற்றிபெற்று தனது முத்திரை பதித்திருக்கிறது. இதன் மூலம் தமிழகம் முழுவதும் தாமரை மலர்ந்திருக்கிறது.
உ.பி. பஞ்சாப், உத்தரகாண்ட், கோவா, மணிப்பூர் உள்ளிட்ட மாநிலங்களில் அண்மையில் சட்டமன்ற தேர்தல் நடைபெற்றது. இதில், பா.ஜ.க நான்கு மாநிலங்களில் அமோக வெற்றி பெற்று ஆட்சியை தக்க வைத்துக் கொண்டது. அதேபோல, போட்டியிட்ட அனைத்து மாநிலங்களிலும் காங்கிரஸ் போல் கம்யூனிஸ்ட் கட்சியும் படுதோல்வியை தழுவியது. இதன் காரணமாக, தமிழகம் மட்டுமில்லாமல் இந்தியா முழுவதும் பா.ஜ.க.வின் செல்வாக்கு தற்பொழுது உயர்ந்து உள்ளது. இதுதவிர, ஹிந்துக்கள் கவனம் பா.ஜ.க.வின் பக்கம் திரும்பும் சூழல் ஏற்பட்டுள்ளது.
இந்நிலையில், பா.ஜ.க.வின் வளர்ச்சியை தடுக்கவும் விதமாக, கோவில் திருவிழாக்களை பா.ஜ.க எடுத்து நடத்துவது போல, இடது சாரிகளும் ஏன் விழாக்ககளை நடத்தக்கூடாது? என பத்திரிக்கையாளர் சந்திப்பில் சி.பி.எம். கட்சியின் மாநிலச் செயலாளர் கே. பாலகிருஷ்ணன் கூறியுள்ளார்.
ஊழல்வாதி, லஞ்சப்பேர்வழி, தமிழின துரோகி, கட்டப் பஞ்சாயத்து, பொய்யன், புளுகன், ஓசிச்சோறு, கொள்ள கோஷ்டி, துரோகக் கும்பல், மாஃபியா, வேடதாரி இந்த வார்த்தைகளை விட ‘சங்கி’ என்ற வார்த்தை சிறந்த வார்த்தைதான் என்று பிரபல திரைப்பட இயக்குனர் பேரரசு சமீபத்தில் கூறியிருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.