ஹிந்து தர்மத்தை அழிக்க தி.மு.க. திட்டம்? கிராம கோயில்களை இடிக்க பகீரத முயற்சி!

ஹிந்து தர்மத்தை அழிக்க தி.மு.க. திட்டம்? கிராம கோயில்களை இடிக்க பகீரத முயற்சி!

Share it if you like it

ஹிந்து தர்மத்தை அழிக்க தி.மு.க. திட்டம் தீட்டி இருப்பதாகவும், இதற்காக கிராமப்புறங்களில் இருக்கும் சிறுசிறு கோயில்களை இடிக்க முடிவு செய்திருப்பதாகவும் தகவல் வெளியாகி கடும் அதிர்ச்சியை ஏற்படுத்தி இருக்கிறது.

இதுகுறித்து ஹிந்து அமைப்பைச் சேர்ந்த தலைவர் ஒருவரிடம் பேசினோம். “தமிழகம் முழுவதும் பல்லாயிரக்கணக்கான ஹிந்து கோயில்கள் இருக்கின்றன. இவற்றில் இந்து சமய அறநிலையத்துறை கட்டுப்பாட்டில் இருக்கும் கோயில்களின் எண்ணிக்கை மட்டும் சுமார் 40,000-க்கும் மேல். இவை தவிர, கணக்கில் வராத கிராமக் கோயில்கள் ஏராளம். இந்து சமய அறநிலையத்துறை கட்டுப்பாட்டில் இருக்கும் கோயில்களுக்குச் சொந்தமாக ஏராளமான நிலங்கள் இருக்கின்றன. இவற்றில் பெரும்பகுதி தனி நபர்களால் ஆக்கிரமிப்பு செய்யப்பட்டிருக்கிறது. இதில், மாற்று மதத்தினரும் அடக்கம். இவ்வாறு ஆக்கிரமிப்பில் இருக்கும் நிலங்களை மீட்க வேண்டும் என்று ஹிந்து சமுதாயத்தினர் வலியுறுத்தி வருகின்றனர். தவிர, ஹிந்து கோயில்கள் மூலம் கிடைக்கும் வருவாயை, அரசு எடுத்து இதர தேவைகளுக்கு பயன்படுத்தி வருகிறது. ஆகவே, ஹிந்து கோயில்களின் வருமானம் ஹிந்துக்களுக்கும், ஹிந்து கோயில்களை பராமரிக்கவும், பக்தர்களுக்கும் மட்டுமே செலவிடப்பட வேண்டும் என்று ஹிந்து சமுதாயத்தினர் வலியுறுத்தி வருகின்றனர். இதற்காக, ஹிந்து கோயில்களை இந்து சமய அறநிலையத்துறையின் கட்டுப்பாட்டில் இருந்து விடுவித்து, ஹிந்து அமைப்புகளிடம் ஒப்படைக்க வேண்டும் என்கிற குரல் ஓங்கி ஒலிக்கிறது.

நிற்க, தமிழகத்தைப் பொறுத்தவரை, தி.மு.க. ஹிந்துக்களுக்கு விரோதமான கட்சி என்கிற அடிப்படையில்தான் பார்க்கப்படுகிறது. அதற்கேற்றார்போல அக்கட்சித் தலைமையும் கிடைக்கும் சந்தர்ப்பங்களில் எல்லாம், ஹிந்துக்களைுயம், ஹிந்து கோயில்களையும், ஹிந்து சமுதாய சடங்குகளையும் தரம் தாழ்த்தி விமர்சனம் செய்து வருகின்றனர். அதேபோல, தி.மு.க.வில் கூட்டணியில் இருக்கும் கட்சித் தலைவர்களும் ஹி்ந்து விரோதப் போக்கையே கடைப்பிடித்து வருகின்றனர். இதனால், உண்மையான ஹிந்துக்கள் தி.மு.க. மீது கடும் அதிருப்தியில் இருந்து வருகின்றனர். ஆகவே, தி.மு.க.வுக்கு எதிரான நிலைப்பாட்டில் இருக்கும் கட்சிகளுக்கு ஆதரவு தெரிவித்து வருகின்றனர். இந்த சூழலில், நடந்து முடிந்த நகர்ப்புற உள்ளாட்சித் தேர்தலில் ஹிந்துக்களின் எழுச்சி, அப்பட்டமாகவே தெரியவந்தது. இதனால், ஹி்ந்துக்கள் மீது கடும் ஆத்திரத்தில் இருக்கிறது தி.மு.க. தலைமை. எனவே, ஹிந்துக்களை ஏதாவது ஒரு வகையில் பழிவாங்க துடித்துக் கொண்டிருக்கிறது. ஆகவே, ஹிந்து தர்மத்தை அழிக்க திட்டமிட்டிருக்கும் தி.மு.க., முதல்கட்டமாக கிராமப்புறங்களிலுள்ள கோயில்களை இடிக்க முடிவு செய்து, சில கோயில்களை இடித்து விட்டது. மேலும் பல கோயில்களை இடித்து வருகிறது.

அந்த வகையில், உடுமலை பள்ளபாளையத்தில் இருக்கும் பழங்கால கோயிலை இடிக்க, தி.மு.க. ஏவிவிட்ட அதிகாரிகள் பொக்லைன் சகிதம் வந்தனர். ஆனால், ஊர் மக்கள் ஒன்று திரண்டு கோயிலை இடிக்க விடாமல் தடுத்து மாபெரும் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். மேலும், பா.ஜ.க., விஷ்வ ஹிந்து பரிஷத், ஹிந்து முன்னணி போன்ற ஹிந்து அமைப்புகளும், பொதுமக்களுக்கு ஆதரவாக களத்தில் இறங்கி போராட்டத்தில் கலந்துகொண்டு தோள்கொடுத்தனர். இதனால், அதிகாரிகள் செய்வதறியாது திகைத்துப் போய் நின்றனர். இதைத் தொடர்ந்து, ஊர் மக்கள் மற்றும் ஹிந்து அமைப்புகளுடன் அதிகாரிகள் பேச்சுவார்த்தை நடத்தி வருகின்றனர். இதேபோல, தென்காசி மாவட்டம் செங்கோட்டை தாலுகா மேலூர் பகுதியிலுள்ள 2 கோயில்களை இடிக்க தி.மு.க.வின் அரசு இயந்திரங்கள் நோட்டீஸ் அனுப்பி இருக்கின்றன. ஆகவே, இது தொடர்பாகவும், ஆர்ப்பாட்டம், போராட்டத்தில் ஈடுபட ஹி்ந்து அமைப்புகள் முடிவு செய்து ஆலோசித்து வருகின்றன.

கிராமக் கோயில்கள் என்பது காலம் காலமாக, பரம்பரை பரம்பரையாக வழிபாடு நடத்தி வரும் கோயில்களாகும். இதுபோன்ற கிராமக் கோயில்களில் இருந்ததால்தான், அன்றைய மொகலாய படையெடுப்பின்போதும் சரி, ஆங்கிலேய படையெடுப்பின்போதும் சரி, ஹிந்துக்களை மதம் மாற்ற முடியவில்லை. இந்த கிராம வழிபாடு மட்டும் இல்லா விட்டால் என்ன நடந்திருக்கும் என்பதே தெரியாது. அத்தகைய சிறப்பு வாய்ந்த கிராமக் கோயில்களை தி.மு.க. அரசு இடித்து தரைமட்டமாக்க முனைந்திருப்பது, ஹிந்து தர்மத்தை அழிக்க நினைக்கும் செயலாகும். ஆகவே, இந்த விஷயத்தில் ஹிந்துக்கள் அனைவரும் ஓரணியில் திரண்டு நின்று, தி.மு.க. அரசுக்கு எதிராகப் போராடி, நமது பாரம்பரிய கோயில்களை காக்க வேண்டும்” என்றார்.

ஹிந்துக்கள் ஒன்றிணைந்தால் சரிதான்!


Share it if you like it