இந்தியா வந்த சீன வெளியுறவுத்துறை அமைச்சரை, மத்திய அமைச்சர் ஜெய்சங்கர் லெப்ட் அண்ட் ரைட் வாங்கியதாகத் தகவல் வெளியாகி இருக்கிறது.
இந்தியா – சீனா வர்த்தம் மற்றும் எல்லைப் பிரச்னை தொடர்பாக இரு நாட்டு வெளியுறவுத்துறை அமைச்சர்களும் அவ்வப்போது சந்தித்து பேச்சுவார்த்தை நடத்துவது வழக்கம். ஆனால், 2019-ம் ஆண்டு இந்திய எல்லையான லடாக் பகுதியில் சீன ராணுவ வீரர்கள் அத்துமீறி உள்ளே நுழைந்தனர். இதை இந்திய ராணுவ வீரர்கள் கண்டித்ததால் இரு தரப்பினரிடையே தள்ளுமுள்ளு ஏற்பட்டது. இது மோதலாக வெடித்ததில் 20 இந்திய வீரர்கள் வீர மரணம் அடைந்தனர். அதேசமயம், சீன தரப்பில் இறந்த ராணுவ வீரர்கள் குறித்து அந்நாடு எத்தகவலையும் வெளியிடவில்லை. இச்சம்பவத்துக்குப் பிறகு, இரு நாடுகளுக்கிடையேயான பேச்சுவார்த்தை துண்டிக்கப்பட்டது.
இந்த நிலையில்தான், சீன வெளியுறவுத்துறை அமைச்சர் வாங் இ, கடந்த சில தினங்களுக்கு முன்பு இந்தியா வந்திருந்தார். இங்கு வருவதற்கு முன்பு அவர் ஆப்கானிஸ்தான் மற்றும் பாகிஸ்தான் சென்றிருந்தார். அப்போது, பாகிஸ்தானில் நடந்த இஸ்லாமிய ஒத்துழைப்பு அமைப்பின் கூட்டத்தில் கலந்துகொண்ட வாங்கி இ, காஷ்மீர் தொடர்பாக ஒரு சர்ச்சையான கருத்தைத் தெரிவித்திருந்தார். இதற்கு இந்தியா கடும் கண்டனம் தெரிவித்திருந்தது. ஆகவே, இந்தியா வந்த வாங் இயை வரவேற்க யாருமே செல்லவில்லை. இது சீன அமைச்சருக்கு பெரும் மூக்குடைப்பாக இருந்தது. எனினும், இதை வாங் இ எதிர்பார்த்திருந்தாரோ என்னவோ தெரியவில்லை, இதை பெரிதாக எடுத்துக் கொள்ளாமல், நேராக இந்தியாவின் பாதுகாப்பு ஆலோசகர் அஜித் தோவாலை அவரது அலுவலகத்தில் சந்தித்து பேசியிருக்கிறார். அப்போது, இரு நாட்டு எல்லைப் பிரச்னை மற்றும் பாதுகாப்பு அம்சங்கள் குறித்து அவர் பேசியதாகத் தெரிகிறது.
இதைத் தொடர்ந்து, இந்திய வெளியுறவுத்துறை அமைச்சர் ஜெய்சங்கரை சந்தித்துப் பேசினார். அப்போதுதான், சீன வெளியுறவுத்துறை அமைச்சர் வாங் இயை ஜெய்சங்கர் லெப்ட் அண்ட் ரைட் வாங்கியதாகக் கூறப்படுகிறது. அதாவது, லடாக்கில் சீன ராணுவ வீரர்கள் அத்துமீறியது, பாகிஸ்தானில் காஷ்மீர் விவகாரம் குறித்துப் பேசியது ஆகியவை தொடர்பாக, வாங் இயை வெளுத்து வாங்கி இருக்கிறார். பின்னர், இரு நாடுகளுக்கு இடையேயான எல்லைப் பிரச்னை, உக்ரைன் – ரஷ்யா போர் உள்ளிட்ட விவகாரங்கள் குறித்து இரு விவாதித்ததாகத் தெரிகிறது. இதன் பிறகு, மீடியாக்களிடம் பேசிய ஜெய்சங்கர், சீனாவின் நடவடிக்கைகள் குறித்து பின்னி பெடலெடுத்து விட்டார்.
https://www.facebook.com/646028701/posts/10159218667658702/?sfnsn=wiwspmo