சென்னை அடையாறு எம்.ஜி.ஆர் ஜானகி மகளிர் கலை அறிவியல் கல்லூரியில் வெற்றி தமிழர் பேரவையின் மகளிர் அணி சார்பில், திருவள்ளுவர் திருவிழா நிகழ்ச்சி நடந்தது. அதில் வைரமுத்து பர்வீன் சுல்தானா முதலானோர் கலந்து கொண்டனர். அந்நிகழ்ச்சியில் வைரமுத்து வன்முறை தூண்டும் விதமாக சர்ச்சைக்குரிய கருத்தை தெரிவித்துள்ளார். பொதுவாக அவர் எங்கு சென்று பேசினாலும் சர்ச்சைக்குரிய ஒரு கருத்தை பதிவிட்டு தன்னை பிரபலப்படுத்திக்கொள்வதை வழக்கமாக கொண்டுள்ளார். அதன்படி இந்நிகழ்வில் திருவள்ளுவரை பற்றியும் திருக்குறளை பற்றியும் பேசாமல் சம்மந்தமில்லாமல் குடியுரிமை திருத்த சட்டத்தை பற்றி பேசியுள்ளார். மேலும் திருவள்ளுவர் CAA வை பற்றி தனது திருக்குறளில் அப்பொழுதே சொல்லியிருக்கிறார் என்று ஒரு போடு போட்டார். அங்கு கூடியிருந்த கூட்டத்தினர் அனைவரும் திருக்குறளில் CAA பற்றியா? என்று மண்டையை பிய்த்து கொள்வதுபோல் விழிபிதுங்கி நின்றனர். இந்நிலையில் ஏன்டா திருக்குறள் என்றாலும் ஒரு நியாயம் வேணாமாடா? என்று நெட்டிசன்கள் வைரமுத்துவை கலாய்த்து வருகின்றனர்.
திருக்குறளில் CAA – சப்பைக்கட்டு கட்டிய வைரமுத்து !
Share it if you like it
Share it if you like it