காங்கிரஸ் கட்சி எம்.பி ராகுல் காந்தி அண்ணல் அம்பேத்கர் பிறந்த நாள் குறித்து ட்விட்டரில் வெளியிட்ட பதிவிற்கு பிரபல எழுத்தாளர் ஆனந்த் ரங்கநாதன் தக்க பதிலடியை தந்துள்ளார்.
அண்ணல் அம்பேத்கரின் 131-வது பிறந்த நாளை முன்னிட்டு இன்று இந்தியா முழுவதிலும் உள்ள அவரது திருவுருவ சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தப்பட்டு வருகிறது. பாரதப் பிரதமர் மோடி மற்றும் இந்திய குடியரசு தலைவர் ராம்நாத் கோவிந்த் மற்றும் பல்வேறு அரசியல் கட்சிகளை சேர்ந்த தலைவர்கள் அவரது சேவைகள், மக்களுக்கு ஆற்றிய தொண்டு குறித்து பகிர்ந்து வருகின்றனர். அந்த வகையில், காங்கிரஸ் கட்சியின் மூத்த தலைவரும், வயநாடு எம்.பி.யுமான ராகுல் காந்தி அண்ணல் அம்பேத்கர் குறித்து இவ்வாறு தனது ட்விட்டர் பக்கத்தில் பதிவு செய்து இருந்தார். அவரது 131-வது பிறந்தநாளை முன்னிட்டு, இந்தியாவின் வலிமையான தூணாகிய நமது புனிதமான அரசியலமைப்பை வழங்கிய பாபாசாகேப் டாக்டர். பி.ஆர் அம்பேத்கருக்கு எனது அஞ்சலிகள் என்று தெரிவித்துள்ளார்.
இதற்கு, பிரபல எழுத்தாளர், அரசியல் விமர்சகர் மற்றும் சமூக ஆர்வலரான ஆனந்த் ரங்கநாதன் காங்கிரஸ் எம்.பிக்கு இவ்வாறு பதிலடி கொடுத்துள்ளார். நேரு. மறைவு 1964. பாரத ரத்னா 1955. இந்திரா. மறைவு 1984. பாரத ரத்னா 1971. ராஜீவ். மறைவு 1991. பாரத ரத்னா 1991. அம்பேத்கர். மறைவு 1956. பாரத ரத்னா 1990. டாக்டர் அம்பேத்கரின் நினைவை உங்கள் கட்சி எவ்வளவு மதிக்கிறது என்பதை பற்றி மேலும் எதுவும் சொல்ல வேண்டியது ஒன்றுமில்லை என பகீர் தகவல் ஒன்றினை வெளியிட்டுள்ளார்.