பிரதமர் மோடி, அமித்ஷா தமிழில் புத்தாண்டு வாழ்த்து!

பிரதமர் மோடி, அமித்ஷா தமிழில் புத்தாண்டு வாழ்த்து!

Share it if you like it

பிரதமர் மோடியும், உள்துறை அமைச்சர் அமித்ஷாவும் தமிழில் புத்தாண்டு வாழ்த்து தெரிவித்திருப்பது தமிழர்களையும், தமிழ் ஆர்வலர்களையும் மகிழ்ச்சியடைய வைத்திருக்கிறது.

மத்திய அரசு தமிழுக்கு எதிரி போலவும், வேண்டுமென்றே தமிழகத்தில் ஹிந்தியை திணிக்க முயற்சிப்பதாகவும் பொய்யான பிரசாரத்தை திராவிட இயக்கங்களும், தி.மு.க.வும், அதன் கூட்டணிக் கட்சிகளும் திட்டமிட்டு செய்து வருகின்றன. ஆனால், பாரத பிரதமர் மோடி எங்கு சென்றாலும், தமிழ் மொழியைப் பற்றி பெருமையாகவே பேசி வருகிறார். மேலும், பல்வேறு இடங்களில் பேசும்போது, திருக்குறளை சொல்லி தனது உரையை ஆரம்பிப்பதையும், பாரதியார், பாரதிதாசன் போன்றவர்களின் கவிதையைச் சொல்லி தமிழர்களையும், தமிழ் ஆர்வலர்களையும் உற்சாகப்படுத்துவதுமாகவே இருந்து வருகிறார்.

இது ஒருபுறம் இருக்க, சமீபத்தில் பேசிய மத்திய உள்துறை அமித்ஷா, இணைப்பு மொழியாக ஆங்கிலத்துக்கு மாற்றாக ஹிந்தியை படிக்கலாம் என்று தனது கருத்தை வெளிப்படுத்தினார். உடனே, தி.மு.க. உ.பிஸ்களும், அதன் கூட்டணிக் கட்சியினரும் வரிந்து கட்டிக்கொண்டு களத்தில் குதித்து, ஹிந்தியைத் திணித்து தமிழை அழிக்கப்பார்க்கிறார்கள் என்று கூக்குரல் இட்டனர். இவர்களுக்கு போலி போராளிகளும் உடந்தையாக இருந்து கம்பு சுற்றினார்கள்.

இந்த நிலையில்தான், தமிழ்ப் புத்தாண்டு தினமான சித்திரை 1-ம் தேதி தமிழில் வாழ்த்துச் சொல்லி அசத்தி இருக்கிறார்கள் பாரத பிரதமர் மோடியும், மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷாவும். பிரதமர் மோடி தனது ட்விட்டர் பதிவில், “அனைவருக்கும் புத்தாண்டு வாழ்த்துகள். குறிப்பாக, எனது தமிழ் சகோதர சகோதரிகளுக்கு வரும் புத்தாண்டு வெற்றிகளையும், சந்தோஷங்களையும் தரட்டும். அனைத்து லட்சியங்களும் நிறைவேறட்டும். அனைவரும் ஆரோக்கியமாகவும், மகிழ்வுடனும் இருக்க வாழ்த்துகள்” என்று தெரிவித்திருக்கிறார்.

அதேபோல, உள்துறை அமைச்சர் அமித்ஷா, “உலகெங்கிலும் உள்ள தமிழ் நண்பர்களுக்கு இனிய புத்தாண்டு வாழ்த்துகள். இந்த புத்தாண்டு நம் வாழ்வில் செழிப்பையும் மகிழ்ச்சியையும் தரட்டும்” என்று தெரிவித்திருக்கிறார். இதுதான் தமிழர்கள் மற்றும் தமிழ் ஆர்வலர்கள் மத்தியில் உற்சாகத்தில் ஆழ்த்தி இருக்கிறது.


Share it if you like it