கோட்டை நோக்கி பா.ஜ.க. பேரணி: அண்ணாமலை ‘அரெஸ்ட்’!

கோட்டை நோக்கி பா.ஜ.க. பேரணி: அண்ணாமலை ‘அரெஸ்ட்’!

Share it if you like it

பெட்ரோல், டீசல் விலையைக் குறைக்கக் கோரி, கோட்டை நோக்கி பேரணி செல்ல முயன்ற தமிழக பா.ஜ.க. தலைவர் அண்ணாமலை உள்ளிட்ட பா.ஜ.க.வினரை போலீஸார் தடுத்தி நிறுத்தி கைது செய்ததால் பரபரப்பு ஏற்பட்டது.

உக்ரைன் போரால் உலகம் முழுவதும் பெட்ரோல், டீசல் விலை உயர்ந்திருக்கிறது. ஆகவே, மக்களின் சுமையை குறைக்கும் வகையில், 2 முறை பெட்ரோல், டீசல் மீதான கலால் வரியை குறைத்து, விலையை குறைத்தது மத்திய அரசு. மேலும், மாநில அரசுகளும் வாட் வரியை குறைக்க வேண்டும் என்று பிரதமர் மோடி கேட்டுக் கொண்டார். இதையேற்று, பா.ஜ.க. ஆளும் மாநிலங்கள் உடனடியாக வாட் வரியை குறைத்து, பெட்ரோல் டீசல் விலையை குறைத்தன. தவிர, கேரளா, மகாராஷ்டிரா போன்ற எதிர்க்கட்சிகள் ஆளும் மாநிலங்களும் வாட் வரியை குறைத்தன.

Image

அதேசமயம், தி.மு.க. ஆட்சிக்கு வந்தால் பெட்ரோல் விலையில் 5 ரூபாயும், டீசல் விலை 4 ரூபாயும் குறைப்பதோடு, கேஸ் சிலிண்டருக்கு 100 ரூபாய் மானியம் வழங்கப்படும் என்று தேர்தலின்போது வாக்குறுதி அளித்திருந்தது. ஆனால், ஆட்சிக்கு வந்த பிறகு, தி.மு.க. தலைமையிலான தமிழக அரசு வாட் வரியை குறைக்கவில்லை. மாறாக, மத்திய அரசு மீது பழிபோட்டு வந்தது. ஆகவே, தி.மு.க. அறிவித்தபடி பெட்ரோல், டீசல் விலையை குறைக்க வேண்டும். கேஸ் சிலிண்டருக்கு 100 ரூபாய் மானியம் வழங்க வேண்டும் என்று வலியுறுத்தி பா.ஜ.க. சார்பில் 31-ம் தேதி கோட்டையை முற்றுகையிட்டு போராட்டம் நடத்தப்படும் என்று தமிழக பா.ஜ.க. தலைவர் அறிவித்திருந்தார்.

Image

இதையடுத்து, சென்னை, செங்கல்பட்டு, திருவள்ளூர், காஞ்சிபுரம் உள்ளிட்ட மாவட்டங்களில் இருந்து பா.ஜ.க.வினர் நேற்று இரவு முதல் சென்னையை நோக்கி படையெடுக்கத் தொடங்கினர். திட்டமிட்டபடி, இன்று காலை எழும்பூர் ராஜரத்தினம் ஸ்டேடியம் அருகே பா.ஜ.க.வினர் திரண்டனர். பின்னர், பா.ஜ.க.வினர் மத்தியில் பேசிய அண்ணாமலை, “அமைச்சர்கள் ஒவ்வொரு ஊராகச் சென்று பட்டத்து இளவரசர் அமைச்சராக்க வேண்டும் என்று தீர்மானம் போடுகின்றனர். ஆனால், பிரதமர் மோடி நேற்று கொரோனாவால் பெற்றோரை இழந்த குழந்தைகளுக்கு நிதியுதவி வழங்கும் திட்டத்தை துவக்கி வைத்தார். இன்று விவசாயிகளுக்கு நிதியுதவி வழங்குகிறார். பா.ஜ.க. நடத்தும் போராட்டத்தில் இருந்து தப்பிக்க முதல்வர் டெல்டா மாவட்டங்களுக்கு சென்று விட்டார். தி.மு.க. அளித்த வாக்குறுதிப்படி பெட்ரோல், டீசல் விலையையும், கேஸ் சிலிண்டருக்கு 100 ரூபாயும் குறைக்காவிட்டால் மாவட்டம்தோறும் போராட்டம் நடத்தப்படும். கஞ்சா உள்ளிட்ட போதை பொருட்கள் வீதியெங்கும் பரவிக்கிடக்கிறது. தி.மு.க. செய்த ஊழலை விஞ்ஞானப்பூர்வமாக வெளியிடுவோம்” என்றார்.

Image

பின்னர், அண்ணாமலை தலைமையில் பா.ஜ.க.வினர் திரளாக கோட்டையை நோக்கி பேரணியாக புறப்பட்டனர். ஆனால், ஏராளமான போலீஸார் குவிக்கப்பட்டு அண்ணாமலை உட்பட பா.ஜ.க.வினரை கோட்டையை நோக்கி செல்ல விடாமல் தடுத்து நிறுத்தினர். எனினும், திமிறிக் கொண்டு செல்ல முயன்ற பா.ஜ.க.வினரை போலீஸார் கைது செய்தனர்.

Image

Share it if you like it