கேரள மாநிலம் குருவிளங்காடு என்னும் பகுதியில் உள்ள தேவாலயத்தில் 2014 முதல் 2016 வரை பிஷப்பாக பிராங்கோ மூலக்கல் பணியாற்றிய பொழுது. தேவாலயத்தில் உள்ள கன்னியாஸ்திரிகளுக்கு தொடர் பாலியல் தொல்லை கொடுத்து வந்த நிலையில், பிஷப் மீது எவரும் புகார் தெரிவிக்காத நிலையில் ஒரே ஒரு கன்னியாஸ்திரி மட்டும் தைரியமாக பிஷப் மீது காவல் நிலையத்தில் புகார் அளித்தார்.
ஆனால் வழக்கம் போல் மீடியாக்களும், அங்குள்ள கம்யூனிஸ்ட் அரசும் பிஷப் மீது மென்மையான போக்கையே மேற்கொண்டது.இதனால் பிஷப் மீது நடவடிக்கை எடுத்து ஆக வேண்டும் என கன்னியாஸ்திரி போராட்டத்தில் ஈடுப்பட்டது நாடு முழுவதும் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. நிலைமை எல்லை மீறியதை அடுத்து அவர் மீது அம்மாநில காவல்துறை 6 பிரிவுகளில் வழக்கு பதிவு செய்தனர்.
சிறிது நாட்களிலேயே அவர் தன் செல்வாக்கை பயன்படுத்தி நிபந்தனை ஜாமின் பெற்று வெளியில் திரிந்துக்கொண்டு இருக்கும் நிலையில். அவ்வழக்கு தொடர்பாக பல்வேறு சாட்சியங்களிடம் காவல்துறை விசாரணை செய்துவருகிறது. இந்நிலையில் மேலும் ஒரு கன்னியாஸ்திரி பிஷப் மீது புகார் ஒன்றினை கூறியிருப்பது நாடு முழுவதும் மீண்டும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
அப்புகாரில் 2015 மற்றும் 2017 ஆம் ஆண்டு பிஷப் என்னிடம் மிகவும் கீழ்தரமாக நடந்துக்கொண்டார். என்னை கட்டிபிடித்து முத்தம் கொடுத்தும், தனிமையில் இருக்கும் பொழுது வீடியோ கால் செய்து என்னிடம் ஆபாசமாகவும், அருவருக்கதக்க வகையில் நடந்துக்கொண்டார் என்று கன்னியாஸ்திரி கூறியுள்ளார்.
இதனை அடுத்து நாடு முழுவதும் உள்ள தேவலாயங்களில் பணியாற்றும் கன்னியாஸ்திரிகளின் பாதுகாப்பினை உறுதிப்படுத்தவும் . இது போன்ற பாதிரியாரின் காமலீலைகளினால் சில நேரம் குழந்தைகள், ஆண்கள், முதியோர், என பாதிக்கப்படுவதால் தேவாலயம் செல்லவே அச்சமாக இருப்பதாக கிறிஸ்துவ மக்கள் கூறியுள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.