Share it if you like it
- மலேசியாவில் பத்மநாதன்,இந்திரா காந்தி என்ற தம்பதியினர் உள்ளனர். அந்த தம்பதிக்கு 2 மகன் 1 மகள் உள்ளனர். 2009 ஆம் ஆண்டு பத்மநாதன் ஹிந்து மதத்திலிருந்து இஸ்லாம் மதத்திற்கு மாறி தன் பெயரை முஹம்மது ரிதுவன் அப்துல்லா என்று மாற்றியுள்ளார். அதன்பின் தனது மூன்று பிள்ளைகளையும் தாயின் அனுமதியின்றியும் அவர்களின் அனுமதியின்றியும் கட்டாயப்படுத்தி துன்புறுத்தி இஸ்லாம் மதத்திற்கு மாற்றியுள்ளார்.
- மலேசியாவில் உள்ள ஷரியா என்ற இஸ்லாம் மக்களுக்கான நீதிமன்றத்தில் தந்தை என்ற முறையில் தனது மகள்கள் இஸ்லாம் மதத்திற்கு மாறியுள்ளார்கள் என்று பதிவு செய்துள்ளார். இதனை எதிர்த்து பிள்ளைகளின் தாயான இந்திரா காந்தி பெடரல் நீதிமன்றத்தில் வழக்கு தொடுத்தார்.
- 2014 ஆம் ஆண்டு தந்தை அப்துல்லா மூன்று பிள்ளைகளில் தனது மகனை கடத்திக்கொண்டு சென்றுவிடுகிறார். இஸ்லாம் மதத்திற்கு மாறியதில் இருந்து தீவிரவாதிகளோடு அவருக்கு தொடர்பு இருந்ததாக பொதுமக்கள் சிலர் கருத்து தெரிவித்துள்ளனர்.
- சில நாட்கள் கழித்து அவர் மகனை தாயிடம் ஒப்படைத்தது காவல்துறை. ஆனால் அப்துல்லா தலைமறைவாகிவிட்டார். அவரை காவல்துறை தீவிரமாக தேடி வருகிறார்கள். இந்நிலையில் பெடரல் உயர்நீதிமன்றம் கடந்த 30 ஆம் தேதி தாய் மற்றும் பிள்ளைகளின் அனுமதியின்றி இஸ்லாம் மதத்திற்கு மாற்றுவதற்கு ஒப்புதல் அளித்த ஷரியா தீர்ப்பை ரத்து செய்தது. இதுகுறித்து “நாங்கள் முஸ்லிமாக மாற்றிய பிறகும் ஹிந்துவாகத்தான் வாழ்ந்து வந்தோம். ஆனால் இன்று முதல் உரிமையோடு ஹிந்துவாக வாழப்போகிறோம் என்பதில் எங்கள் மனம் சந்தோஷத்தில் திளைக்கிறது என்று அவர்கள் கூறியிருக்கிறார்கள்.
Share it if you like it