பா.ஜ.க தலைவரின் குற்றச்சாட்டில் உள்நோக்கம் கிடையாது – ஜி.கே.வாசன் கருத்து!

பா.ஜ.க தலைவரின் குற்றச்சாட்டில் உள்நோக்கம் கிடையாது – ஜி.கே.வாசன் கருத்து!

Share it if you like it

தமிழ் மாநில காங்கிரஸ் கட்சியின் தலைவர் ஜி.கே.வாசன் பா.ஜ.க தலைவரின் குற்றச்சாட்டு உள்நோக்கம் கிடையாது என தனது ஆதரவினை வழங்கியுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

தி.மு.க அரசின் தவறுகளை பா.ஜ.க தலைவர் அண்ணாமலை சுட்டிக்காட்டி வருகிறார். இதுதவிர, பல்வேறு அரசு துறைகளில் நடக்கும் ஊழல்களை நாட்டு மக்களிடம் தொடர்ந்து அம்பலப்படுத்தி வருகிறார். இதன்காரணமாக, விடியல் அரசு மீது பொதுமக்களுக்கு கடும் அதிருப்தியும், கோவமும் ஏற்பட்டுள்ளது. மேலும், பா.ஜ.க. தலைவரின் குடைச்சலை தாங்க முடியாமல் ஸ்டாலின் அரசு திணறி வரும் சூழல் ஏற்பட்டுள்ளது. அந்தவகையில், கர்ப்பிணிகளுக்கு வழங்கும் ஊட்டச்சத்து பெட்டகங்கள் கொள்முதலுக்காக தமிழக அரசு விடுத்த 450 கோடி ரூபாய் டெண்டரில், 100 கோடி ரூபாய் லஞ்சம் கைமாறியுள்ளது.

இந்த டெண்டரில், ஆவின் நிறுவனம் புறக்கணிக்கப்பட்டு, தனியார் நிறுவனத்திற்கு சாதகமாக முடிவு எடுக்கப்பட்டுள்ளது என்று அண்மையில் நடந்த பத்திரிகையாளர் சந்திப்பில் தி.மு.க.வின் தில்லாலங்கடி தனத்தை அம்பலப்படுத்தி இருந்தார். இதையடுத்து, ‘ஹெல்த் மிக்ஸ் பொருளை ஆவின் நிறுவனத்திடமே நாங்கள் வாங்கி கொள்கிறோம் என்று அமைச்சர் மா.சுப்பிரமணியன் அண்மையில் அந்தர்பல்டி அடித்து இருந்தார். இச்சம்பவத்தைத் தொடர்ந்து, பொதுமக்கள் தமிழக அரசை சமூக வலைத்தளங்களின் வாயிலாக பொடி மாஸ் செய்து வருகின்றனர்.

இந்நிலையில், தமிழ் மாநில காங்கிரஸ் கட்சியின் தலைவர் ஜி.கே.வாசன், தமிழ்நாடு பா.ஜ.க தலைவர் திரு. அண்ணாமலை அவர்கள் தமிழக அரசு மீது கூறும் குற்றச்சாட்டுக்கு உள்நோக்கமும் கிடையாது. திரு. அண்ணாமலை அவர்கள் கூறும் கருத்துக்கள் அனைத்தும் பொது நலனை அடிப்படையாக கொண்டது. தமிழ்நாடு அரசின் திட்டமிடல் சரியில்லை என்பதைத் தான் தமிழக பா.ஜ.க தலைவர் தொடர்ந்து கூறிவருகிறார் என தனது ட்விட்டர் பக்கத்த்தில் தெரிவித்துள்ளார்.


Share it if you like it