மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் தி.மு.க எம்.பி. தர்ணா செய்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி இருக்கிறது.
திராவிட முன்னேற்ற கழக தலைவர் மற்றும் தமிழக முதல்வராக இருப்பவர் ஸ்டாலின். இவர், ஆட்சி பொறுப்புக்கு வந்த பின்பு அக்கட்சியை சேர்ந்த தொண்டர்கள், நிர்வாகிகள் மற்றும் மூத்த தலைவர்கள் பொதுமக்களுக்கு இன்று வரை பல தொல்லைகளை கொடுத்து வருகின்றனர். இது ஒருபுறம் என்றால், கூட்டணியில் அங்கம் வகிக்கும் கட்சி தலைவர்களை தி.மு.க தலைமை உரிய மரியாதை கொடுக்காமல் அவமதிப்பு செய்து வரும் சம்பவங்கள் தொடர்ந்து நிகழ்ந்த வண்ணம் இருந்து வருகிறது.
அந்தவகையில், மத்திய அரசு திட்டத்தின் மூலம் கரூர் மாவட்டத்தில் உள்ள மாற்றுத் திறனாளிகளுக்கு முகாம்கள் நடத்தி அவர்களுக்கு தேவையான உபகரணங்களை உடனே வழங்க வேண்டும் என கரூர் மாவட்ட ஆட்சியரிடம் காங்கிரஸ் எம்.பி. ஜோதிமணி கடிதம் வழங்கி இருக்கிறார். ஆனால், தனது கடிதத்திற்கு உரிய பதில் கிடைக்கவில்லை என மாவட்ட ஆட்சியர் மீது குற்றம் சுமத்தி அங்கேயே, திடீர் என்று உள்ளிருப்பு போராட்டம் நடத்தினார். இச்சம்பவம் கடந்த ஆண்டு பொதுமக்கள் மத்தியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி இருந்தது.
இந்நிலையில், தி.மு.க கூட்டணியில் அங்கம் வகிக்கும் கொங்கு மக்கள் தேசிய கட்சியின் மூத்த தலைவரும் நாமக்கல் எம்.பியுமாக இருப்பவர் சின்ராஜ். இவர், தனது நாடாளுமன்ற தொகுதிக்கு உட்பட்ட மோகனூர் ஊராட்சி ஒன்றியம் லத்துவாடி ஊராட்சி தலைவர் மீது பொதுமக்கள் பல புகார்களை தெரிவித்து இருக்கின்றனர். அந்தவகையில், அவர், மீது கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும் என எம்.பி. சின்ராஜ். மாவட்ட ஆட்சியரிடம், தொலைபேசி வாயிலாக கோரிக்கை விடுத்து இருக்கிறார். ஆனால், அவர் மீது எந்த விதமான நடவடிக்கையும் எடுக்கவில்லை என்று சொல்லப்படுகிறது. இதனால், கடும் அதிருப்தி அடைந்த எம்.பி. நாமக்கல் மாவட்ட ஆட்சியர் அலுவலக வளாகத்தின் வாயிலில் அமர்ந்து திடீரென்று தர்ணா போராட்டம் செய்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி இருக்கிறது.