தாடி வைத்தார் என்பதற்காக இஸ்லாமியர் ஒருவருக்கு சீன கொடூங்கோல் அரசு மிக கடுமையான தண்டனையை வழங்கி இருப்பது உலக நாடுகள் மத்தியில் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தி இருக்கின்றன.
சீனாவில் எழுத்துரிமை, பேச்சுரிமை மற்றும் மத சுதந்திரம் முற்றிலும் மறுக்கப்பட்ட அவல நிலையே இன்று வரை தொடர்கதையாக இருந்து வருகிறது. குறிப்பாக, உய்குர் முஸ்லீம் பெண்களுக்கு வலுக்கட்டாயமாக குடும்ப கட்டுப்பாடு செய்வது. குழந்தைகளை தாயிடம் இருந்து பிரிப்பது, அப்பாவி இஸ்லாமிய மக்களை சித்தரவதை முகாம்களில் அடைப்பது. அங்கேயே, கொடூரமான முறையில் அவர்களை கொல்வது என உய்குர் மக்கள் தினம் தினம் ரத்த கண்ணீர் வடித்து வருகின்றனர். சீனாவின் அட்டூழியங்களை பொறுக்க முடியாமல் பலர் அந்நாட்டை விட்டே ஓடும் அவலநிலை இன்று வரை நிகழ்ந்த வண்ணம் இருக்கின்றன.
பெரும்பாலான முஸ்லீம் தலைவர்கள் முதுகெலும்பு இல்லாதவர்கள் உய்குர் மக்கள் குறித்து இவர்கள் பேசுவதில்லை என இஸ்லாமிய மதகுரு இமாம் தவ்ஹிடி கடந்த சில ஆண்டுகளுக்கு முன்பு ஆக்ரோஷமான முறையில் கருத்து தெரிவித்து இருந்தார்.
சீன கம்யூனிஸ்ட் அரசு என்ன கூறுகிறதோ? அதையே மக்கள் சிந்திக்க பேச, எழுத, வேண்டும் என நினைக்கும் உலகின் மிக கொடிய நாடு. சீனாவில் வாழும் உய்குர் இஸ்லாமியர்களின் நிலையோ நாளுக்கு நாள் மிகவும் மோசமான நிலையை நோக்கி நகர்ந்து கொண்டு இருக்கின்றன. அந்த வகையில், சீனாவை சேர்ந்த இஸ்லாமியர், துர்சுன் காதிர் என்பவர் தனது மத வழக்கப்படி தாடி வைத்து இருக்கிறார். இதனால், கடும் கோவம் அடைந்த சீன அரசு அவருக்கு 16 ஆண்டுகள் சிறைத் தண்டனையை வழங்கி இருக்கிறது.
பாரதப் பிரமர் மோடி, மத்திய அரசு என்றால் உடனே குரல் கொடுக்கும் கம்யூனிஸ்ட் கட்சியை சேர்ந்த தோழர்கள், ஜவாஹிருல்லா, ஆளூர் ஷாநவாஸ் மற்றும் திருமா போன்றவர்கள் சீனா அரசு செய்து வரும் இது போன்ற அட்டூழியங்கள் குறித்து எப்பொழுது வாய் திறப்பார்கள் என்பது பலரின் கேள்வியாக இருந்து வருகிறது.